தமிழகம்

ஜன.22-ம் தேதி சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது பட்டமளிப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில், பிஎச்டி பட்டதாரிகள் நேரில் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகம் செய்யப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பட்டமளிப்பு விழாவுக்கான கட்டணமாக ரூ.525 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜனவரி 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT