சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

 
தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சுதந்திர தின விழா

செய்திப்பிரிவு

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்​துடன் தொடங்​கிய சுதந்​திர தின விழா​வில் தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி தேசி​யக் ​கொடியேற்றி வைத்​தார்.

தமி​ழ​கத்​தில் நடை​பெறும் அனைத்து அரசு நிகழ்ச்​சிகளி​லும் தமிழ்த்​தாய் வாழ்த்து முதலா​வ​தாக பாட வேண்​டும் என சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் தமி​ழ​கம், புதுச்​சேரி​யி்ல் உள்ள கீழமை நீதி​மன்​றங்​களில் 80-வது சுதந்​திர தின​விழாவை முன்​னிட்டு வந்தே மாதரம் பாடப்​பட்​டு, தேசி​யக்​கொடியேற்றி வைக்​கப்​பட்​டதும், தேசிய கீதத்​துடன் விழா நிறைவடை​யும் என உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் தீப்தி அறி​வுநிதி 2 நாட்கள் முன்பு சுற்​றறிக்கை பிறப்​பித்​​தார்.

ஆனால், தமிழ்த்​தாய் வாழ்த்து முதலா​வ​தாக பாடப்​பட்​டு, அதன்​பிறகு மத்​திய அரசின் அறி​வுறுத்​தல்​படி வந்தே மாதரம் பாடப்​பட்​டு, தேசி​யக்​கொடி ஏற்​றப்​படும். தேசிய கீதத்​துடன் விழா நிறைவடை​யும் என தலை​மைப் பதி​வாளர் நேற்று முன்​தினம் மாலை மற்​றொரு சுற்​றறிக்கை பிறப்​பித்​தார்.

அதன்​படி, பாரம்​பரியமிக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் தமிழ்த்​தாய் வாழ்த்து முதலா​வ​தாக பாடப்​பட்​டு, அதன்​பிறகு வந்தே மாதரம் பாடப்​பட்​டது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்​மா​தி​காரி தேசி​யக்​கொடியேற்றி வைத்து சிஐஎஸ்​எப் வீரர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றுக்​கொண்​டார்.

விருதுகள், கேடயங்கள்: சிறப்​பாக பணி​யாற்​றும் ஊழியர்​கள், அலு​வலர்​கள், அதி​காரி​கள், போலீஸ் அதி​காரி​களுக்கு விருதுகள், கேட​யங்​களை வழங்​கி​னார்.

இந்​நிகழ்​வில், உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், அமைச்​சர் சிடிஆர் நிர்​மல்​கு​மார், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், மாநகர காவல் ஆணை​யர் ஏ.அமல்​ராஜ், அரசின் தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயணன், மாநில தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன், கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​கள் பி.​வி.​பாலசுப்​பிரமணி​யம், டி.கவுதமன், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ஆர்​.சி. பால் கனக​ராஜ், மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் தலை​வர் வி.ஆர்​.கமல​நாதன், பெண் வழக்​கறிஞர் சங்​கத் தலை​வர் என்​.எஸ்​.ரேவ​தி, லா அசோசி​யேஷன் தலை​வர் செல்​வ​ராஜ் உள்​ளிட்ட நிர்​வாகி​கள், தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் நிர்​வாகி​கள், முப்​படை தளப​தி​கள், உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் தீப்தி அறி​வுநிதி தலை​மை​யில் பதி​வாளர்​கள், நீதித்​துறை அலு​வலர்​கள், கீழமை நீதி​மன்ற நீதிப​தி​கள் பங்​கேற்​ற​னர்.

தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சிலில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் பார் கவுன்​சில் நிர்​வாக குழு உறுப்​பினர்​களான அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் மற்​றும் பி.எஸ்​.அமல்​ராஜ் ஆகி​யோர் இணைந்து தேசி​யக்​கொடி ஏற்​றினர். அமைச்​சர் நிர்​மல்​கு​மார் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். பார் கவுன்​சில் நிர்​வாகக்​குழு உறுப்​பினர்​கள் வி.​கார்த்​தி​கேயன், ஜி.மோக​ன கிருஷ்ணன், டி. மைக்​கேல் ஸ்டானிஸ் பிரபு மற்​றும் பார் கவுன்​சில்​ உறுப்​பினர்​கள்​ பிற வழக்​கறிஞர்​கள்​ சங்​க பிர​தி​நிதிகள்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT