குமரி மதுமிதா

 
தமிழகம்

சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாகும் மதுமிதா: சீதை, ஜெயலலிதாவை மேற்கோள் காட்டி வீடியோ

எல்.மோகன்

நாகர்கோவில்: சீதை, ஜெயலலிதாவை மேற்​கோள் காட்டி வெளி​யிட்ட வீடியோவால் யூடியூபர் மதுமிதா மீண்​டும் ட்​ரெண்​டிங் ஆகி வரு​கிறார்.

நாகர்​கோவிலை அடுத்த தம்​பத்​துக்​கோணத்தை சேர்ந்​தவர் மது​மிதா (29). யூ டியூபரான இவர் தனது பெண் குழந்​தையுடன் நின்று ரூபாய் நோட்​டுக்​களை​யும், தங்க நகைகளை​யும் கொட்டி வெளி​யிட்ட வீடியோ அவரை பிரபலப்​படுத்​தி​யதுடன், சர்ச்​சையையும் ஏற்​படுத்​தி​யது. இந்த வீடியோ வெளியான சில நாட்​களில், இவரது வீட்​டில் 118 பவுன் நகைகள் திருடப்​பட்​டன. மேலும், பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த முதி​ய​வர் ஒரு​வரது தங்க நகையைப் பறித்​த​தாக மது​மிதா மீது பாளை​யங்​கோட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

அடுத்​தடுத்த சர்ச்​சைகளால் மது​மிதா தம்​பத்​துக்​கோணத்​தில் உள்ள தனது வீட்​டில் இருந்து தலைமறைவானார். அத்​துடன், அவர் சமூக வலை தளங்​களில் வீடியோவும் பதி​விட​வில்லை. இந்​நிலை​யில் அவர், ‘நான் வந்​துட்​டேன்...’ என்ற ரீதி​யில், கடந்த இரு தினங்​களாக வீடியோக்​களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வரு​கிறார்.

தனது குழந்​தைக்கு பிறந்த நாள் கொண்​டாடும் வீடியோக்​களை​யும் வெளி​யிட்​டுள்​ளார். இதை பல லட்​சம் பேர் பார்த்​துள்​ளனர். அவர் வெளி​யிட்​டுள்ள ஒரு வீடியோவில் சீதை, ஜெயலலிதா ஆகியோரை மேற்​கோள் காட்டி பேசி​யிருப்​பது சர்ச்​சையாகி​யுள்​ளது.

ஒரு வீடியோவில் மது​மிதா பேசி​யிருப்​ப​தாவது: “சீதையையே தீக்​குளிக்க வைத்​தீர்​கள். அதன் பிறகும் அவரை யாரும் நம்​பவில்லை. என்​னைப் பற்றி பேசப்​பேச நான் உயர்ந்​து​கொண்டே தான் இருப்​பேன். ஒரு பெண் நன்​றாக இருந்​தால் அந்த குடும்​பத்தை எப்​படி வீழ்த்​தலாம் என்று நினைக்​கிறீர்​கள். ஒருபோதும் அது நடக்​காது.

நானும், என் கணவர், குழந்​தையும் நன்​றாகவே இருப்​போம். எங்​களை யாராலும் அழிக்க முடி​யாது. முன்​னாள் முதலமைச்​சர் ஜெயலலிதாவை எவ்​வளவு அவதூறாக பேசினார்​கள். ஆனால் அவர் இரும்பு மனித​ராக நிமிர்ந்து நின்​றார். தனது குழந்​தையை விட ஒரு மதிப்​பெண் அதி​க​மாக எடுத்த மாணவரையே கொன்ற போட்​டியுள்ள உல​கம் இது” என, அவர் பேசி​யுள்ள வீடியோவால் மீண்​டும் ட்​ரெண்​டிங் ஆகி வரு​கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT