மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

“பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது” - மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தாராபுரம்: இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தாராபுரத்​தில் நேற்று நடை​பெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் கூறிய​தாவது: இந்த இடைத்​தேர்​தலில் நாங்​கள் தெரு​வீ​தி​களில் மக்​களை சந்​திக்​கிறோம்.

குக்​கி​ராமங்​களில் கூட 50, 60 வாக​னங்​களில் சென்று அரசி​யல் கட்​சி​யினர் பேப்​பர், பென்​சில் வைத்து குறிப்பு எடுத்து போன் பே, கூகுள் பே வில் பணம் போடு​வது எப்​படி என்று கணக்​கெடுக்​கின்​றனர். இடைத்​தேர்​தலில் பணப்​பட்​டு​வா​டா​வைத் தடுக்க தேர்​தல் ஆணை​யம் முற்​றி​லும் தவறி​விட்​டது.

இடைத்​தேர்​தலில் தெருக்​களையே விலைபேசும் முயற்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில், அமைச்​சர்​கள் பலர் இறங்​கி​யிருப்​ப​தாக செய்தி வெளி​யாகி வரு​கிறது. இதே நிலை​யில் சென்​றால் நாடாளு​மன்ற ஜனநாயகம் மிகுந்த நெருக்​கடிக்கு உள்​ளாகி​விடும். இவ்​வாறு அவர் கூறி​னார். திருப்​பூர் மக்​களவை உறுப்​பினர் கே.சுப்​ப​ராயன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT