சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது ஏற்புடையதல்ல.
திருவள்ளூர் தமிழின் குறியீடு. அதை வலது பக்கம் திருப்பும் முயற்சியில் ஆளுநர் ஈடுபடகூடாது. கலாசார கூறுகளை ஆளுநர் மதித்து நடத்த வேண்டும், தமிழ் பன்பாடுகளை, 100 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் குதிரை பேரம் என்ற வார்த்தையை செவியில் கூட கேட்டதில்லை.
இது மக்கள் அளித்த தீர்ப்பின் மீதான தாக்குதல். இதை நாங்கள் எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம். முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சட்ட ஒழுங்கில் காலஅவகாசம் கூடாது.
அரசு, அதிகாரிகள், காவல்துறை, பல ரகசிய பிரிவுகள் உள்ளன. அவை முடிக்கி விடப்பட வேண்டும். எந்த வகையிலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவக்கூடாது.
சட்ட ஒழுங்கில் கூடுதல் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.