தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கோம்பேரி கோம்பை பகுதியில் சாலை அமைக்கக் கோரும் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆய்வு செய்தார்.

 
தமிழகம்

ஜனநாயகத்துக்கு பொருந்தாத உடல்​ மொழிகளை முதல்வர் விஜய் தவிர்க்க வேண்டும்: மு.வீரபாண்டியன் கருத்து

செய்திப்பிரிவு

தரு​மபுரி: ஜனநாயகத்​துக்கு பொருந்​தாத உடல்​மொழிகளை முதல்​வர் விஜய் தவிர்க்க வேண்​டும், என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கருத்து தெரி​வித்​தார்.

தரு​மபுரி​யில் நடந்த தொழிற்​சங்க இணைப்பு விழா பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்க வந்த மு.வீர​பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தரு​மபுரி​யில் சிப்​காட் தொழிற்​பேட்​டையை விரைந்து தொடங்க வேண்​டும். கோம்​பேரி கோம்பை வழி​யாக பொம்​மிடி செல்​வதற்​கான சாலையை விரைந்து அமைக்க வேண்​டும். காவிரி​யாற்​றின் குறுக்கே மேகே​தாட்டு பகு​தி​யில் கர்​நாடகா புதிய அணையை கட்​டி​னால் மேட்​டூர் அணைக்கு தண்​ணீர் கிடைக்​காது.

இந்த நடவடிக்​கையை கண்​டித்​து, வரும் 13-ம் தேதி கிருஷ்ணகிரி மற்​றும் ஓசூரில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடத்த உள்​ளோம்.

தமிழர்​களும், கன்​னடர்​களும் சகோ​தரர்​களாக உள்​ளனர். தமிழகத்​துக்கு தேவை​யான தண்​ணீரை கர்​நாடகா அரசு திறக்க வேண்​டும்.

போதைப் பழக்​கம் மற்​றும் பாலியல் துன்​புறுத்​தல், வன்​கொடுமைக்கு எதி​ராக அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்​றம் சார்​பில் 1 கோடி கையெழுத்து இயக்​கம் நடை​பெறுகிறது. தமிழக மக்​கள் இதற்கு ஆதரவு தர வேண்​டும்.

மத்திய அரசின் கொள்கை: களால் பல தொழில்​கள் நெருக்​கடிக்கு உள்​ளாகி தொழிலா​ளர்​கள் பாதிப்​படைந்​துள்ள நிலை​யில் அவர்​களின் வாழ்​வா​தா​ரம் காக்க இந்​தியா முழு​வ​தி​லும் ஆகஸ்ட் 6 முதல் 15 நாட்​களுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் தேசிய கொடியை ஏந்​தி​யபடி நடைபயணம் மேற்​கொள்​ளப்பட உள்​ளது. இதற்​கும் தமிழக மக்​கள் ஆதரவு அளிக்க வேண்​டும்.

ஈரான் மீது மீண்​டும் போர் தொடுக்​கப்​பட்டு வரு​கிறது. வளை​குடா நாடு​களில் மலை​யாளம் பேசும் மக்​கள் பலர் வசித்து வரு​கின்​றனர். அவர்​களுக்கு பணிப் பாது​காப்பு வேண்​டும். ஈரான் மீது போர் தொடுக்​கும் அமெரிக்​காவை எதிர்த்து பிரதமர் மோடி குரல் கொடுக்க வேண்​டும். கரூர் சம்​பவம் குறித்து முதல்​வர் சட்​டப்​பேர​வை​யில் பேசி​யிருக்க வேண்​டும்.

வாக்கு மை காயும் முன்​பாக மக்​கள் பிர​தி​நி​தி​கள் கட்சி தாவுவது ஜனநாயகத்​தின் மீதான நெருக்​கடி ஆகும். தமிழக முதல்​வர் புதி​ய​வர். அவரிடம் இருந்து இன்​னும் அதி​க​மான திட்​டங்​கள், கொள்​கைகளை நாடு எதிர்​பார்க்​கிறது. ஜனநாயகத்​துக்கு பொருந்​தாத உடல்​மொழிகளை முதல்​வர் விஜய் தவிர்க்க வேண்​டும்.

தேர்​தலில் கட்​சிகளின் வெற்​றி,தோல்வி​கள் இயல்​பானவை. ஆனால், மதவாத சக்​தி​களை வீழ்த்த ஜனநாயக சக்​தி​கள் ஒன்​றிணைய வேண்​டும். கரூர் நிகழ்ச்​சி​யில், லஞ்​சம் கூடாது என முதல்​வர் பேசி​யிருப்​பது வரவேற்​கத்​தக்​கது. பலரின் உழைப்பை சிலர் சுரண்​டு​வது நல்​லதல்ல. ஆனால், 40 ஆண்​டு​கால குறை​களை சரிசெய்ய சற்று அவகாசம் தேவைப்​படும். கடந்த ஆட்சி காலத்​தில், இந்​தி​யா​விலேயே சமூக நல திட்​டங்​களை வழங்​கு​வ​தில் தமிழ்​நாடு முதலிடத்​தில் இருந்​தது.

கடந்த ஆட்​சி​கால திட்​டங்​கள் விருப்​பு,வெறுப்​பின்றி தொடர வேண்​டும். தவெக தேர்​தல் அறிக்​கை​யில் அளித்த வாக்​குறு​தி​களை உடனே நிறைவேற்ற வேண்​டும். இவ்​வாறு கூறி​னார். நிகழ்ச்​சி​யின்​போது, கட்​சி​யின் மாநில நிர்​வாகக் குழு உறுப்​பினர் தேவ​ராசன், மாவட்ட செய​லா​ளர் கலைச்​செல்​வம், ஏஐஒய்​எப் மாவட்ட செய​லா​ளர் நவீன்​கு​மார் உள்​ளிட்ட பலர் உடனிருந்​தனர்.

SCROLL FOR NEXT