தமிழகம்

திமுக-தவெக இடையேதான் போட்டியா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

செய்திப்பிரிவு

பரமக்குடி: ​தி​முக​வுக்​கும் தவெக​வுக்​கும் இடையே​தான் போட்​டியா என செய்​தி​யாளர்​கள் எழுப்​பிய கேள்விக்கு முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்டா​லின் பதில் அளித்​துள்​ளார்.

ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் போட்​டி​யிடும் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பரமக்​குடி​யில் நேற்று ஸ்​டா​லின் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

          

முன்ன​தாக நேற்று காலை பரமக்குடி​யில் நடைப்​பயிற்சி மேற்​கொண்ட அவர், காந்தி சிலை, பெரிய பஜார், மீன் சந்தை உள்​ளிட்ட பகு​தி​களி​ல் மக்​களை சந்​தித்து வாக்​குச் சேகரித்​தார்.

அவரிடம் பலர் புத்​தகங்​களை வழங்கி செல்ஃபி எடுத்​துக் கொண்​டனர். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் முதல்​வர் கூறிய​தாவது: தோல்வி அடையப்​போவ​தால் பழனி​சாமி விரக்​தி​யில் இருக்​கிறார்.

அதனால்​தான் திமுக தலை​வர்​கள் பற்றி அவதூறாகப் பேசுகிறார். தமிழ்​நாட்​டுக்​கும் டெல்​லிக்​கும்​தான் போட்டி என்று நான் தெரி​வித்து வரு​வதற்குகாரணமே, அதி​முகவின் முக​மூடி போட்​டுத்​தானே பாஜக உள்ளே வரு​கிறது.

அதனால்​தான் அப்​படி கூறுகிறேன். தமிழக அரசின் தலை​மைச் செயலரை மாற்றி தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டதைக் கண்​டித்து அறிக்கை அளித்​துள்​ளேன்.

தேர்​தல் ஆணை​யத்​திடம் டி..ஆர்​.​பாலு புகார் மனு அளித்​துள்​ளார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். திமுக​வுக்​கும், தவெக​வுக்கும் இடையே​தான் போட்டி என்று விஜய் சொல்லி வரும் நிலை​யில், அவர் நடித்த ஜனநாயகன் படக் காட்சிகள் இணை​யத்​தில் கசிந்​துள்​ளதே என்று செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, ‘அதைப் பற்றி கருத்​துக் கூற விருப்​பமில்​லை’ என்று பதில் அளித்​தார்.

SCROLL FOR NEXT