தமிழகம்

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்

பணி ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு பாடநூல், கல்​வி​யியல் பணி​கள் கழகத்​தின் தலை​வ​ராக ஏ.லயோலா மணி நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு பணி நியமன ஆணையை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

பள்ளி மாணவர்​களுக்​கான பாடப் புத்​தகங்​களை அச்​சடித்து விநி​யோகிக்​கும் பணியை தமிழ்​நாடு பாடநூல், கல்​வி​யியல் பணி​கள் கழகம் மேற்​கொண்டு வரு​கிறது.

கடந்த திமுக ஆட்​சி​யின்​ போது, ஆசிரியரும், பட்​டிமன்​றப்பேச்​சாள​ரும், திமுக கொள்கை பரப்​புச் செய​லா​ள​ரு​மான திண்​டுக்​கல் ஐ.லியோனி, பாடநூல் கழகத்​தின் தலை​வ​ராக செயல்​பட்டு வந்​தார்.

இந்நிலையில், புதிய தலை​வரை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் சந்​திரமோகன் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில், ‘தமிழ்​நாடு பாடநூல், கல்​வி​யியல் பணி​கள் கழகத்​தின் தலை​வ​ராக ஏ.லயோலா மணியை அரசு நியமித்​துள்​ளது.

அவரது பதவிக் காலம் 3 ஆண்​டு​கள். அவரது நியமனம் தொடர்​பான இதர விதி​முறை​கள் தனி​யாக வெளி​யிடப்​படும்’ என்று கூறப்​பட்​டுள்​ளது. லயோலா மணிக்கு பணி நியமன ஆணையை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் நேற்று வழங்​கி​னார்.

அப்​போது பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் உடன் இருந்​தார். பாடநூல் கழகத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள லயோலா மணி, தவெக பேச்​சாளர், கொள்கை பரப்பு இணைச் செய​லா​ளர் என்​ப​து குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT