சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை சராசரி கடல் மட்டத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய தெற்கு வங்கதேசப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்தில் இருந்து 7.6 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (ஜூலை 3) உருவாகக்கூடும். இன்று (ஜூலை 2) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நேற்று அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாறில் 8 செ.மீ. வால்பாறையில் 4 செ.மீ. மழை பெய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.