தமிழகம்

எம்எல்ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம்: சிங்கப்பூர் நபருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: தவெக எம்​எல்ஏ. ஒரு​வருக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்​ட​தாக தொடரப்​பட்ட வழக்​கின் முக்​கிய மூளை​யாகச் செயல்​பட்​ட​தாக சந்​தேகிக்​ப்​படும் சிங்​கப்​பூரைச் சேர்ந்த லட்​சுமண பெரு​மாள் என்​பவருக்கு எதி​ராக சென்னை போலீ​ஸார் லுக்​-அவுட் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளனர்.

சட்​டப்​பேர​வை​யில் பேர​வைத்தலை​வருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டால், அதை ஆதரிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்​ட​தாக ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ. இளை​ய​ராஜா புகார் அளித்​திருந்​தார்.

இதையடுத்​து, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு, திருச்சி நரேஷ், மேட​வாக்​கம் தியாக​ராஜன் உள்​ளிட்ட 9 பேரை கைது செய்​தனர்.

இவர்​கள் அளித்த தகவலின் அடிப்​படை​யில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகியோரை விசா​ரிக்க போலீ​ஸார் சம்​மன் அனுப்​பிய நிலை​யில், இரு​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் பெற்​றனர்.

இதற்​கிடையே, கைதானவர்களிடம் போலீஸ் காவலில் விசா​ரித்​த​போது, சென்னை கிண்​டி​யில் உள்ள பிரபல நட்​சத்​திர ஓட்​டலில் தங்கி ரகசிய ஆலோ​சனை​கள் நடை​பெற்​றது தெரிய வந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களின் வீடு​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் முக்​கிய ஆவணங்​களும் கைப்​பற்​றப்​பட்​டன. அந்த ஆவணங்​கள் மற்​றும் செல்​போன் அழைப்பு விவரங்​களை ஆய்வு செய்​த​போது, கைதானவர்​களில் ஒரு​வர், சிங்​கப்​பூரில் வசிக்​கும் லட்​சுமண பெரு​மாள் என்​பவருடன் தொடர்ந்து தொடர்​பில் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

அவர் சென்னை வந்து இவர்​களை சந்​தித்​துப் பேசி​ய​தாக​வும் கூறப்​படு​கிறது. இதையடுத்​து, லட்​சுமண பெரு​மாள் குறித்து தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணையை தீவிரப்​படுத்​தினர்.

இதையறிந்த லட்​சுமண பெரு​மாள், சிங்​கப்​பூருக்கு தப்​பிச் சென்​றதுடன், அங்​கிருந்​த​படியே தொழில்​நுட்ப உதவி​யுடன் சென்னை ஓட்​டலின் சிசிடி​வி. பதிவு​கள் மற்​றும் வழக்​குக்கு தொடர்​புடைய சில டிஜிட்​டல் ஆதா​ரங்​களை அழிக்க முயன்​ற​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, அவர் வெளி​நாடு​களுக்கு மேலும் தப்​பிச் செல்​லாமல் தடுக்​க​வும், இந்​தி​யா​வுக்​குள் நுழைந்​தவுடன் கைது செய்​ய​வும் சென்னை போலீ​ஸார் அவருக்கு எதி​ராக அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் லுக்​-அவுட் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளனர்.

மேலும், அவரது செல்​போன் பயன்​பாடு மற்​றும் இருப்​பிடத்தை சைபர் க்ரைம் போலீ​ஸார் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். லட்​சுமண பெரு​மாள் கைது செய்​யப்​பட்​டால், இந்த வழக்​கில் மேலும் பல முக்​கிய தகவல்​கள் வெளி​யாக வாய்ப்​புள்​ள​தாக போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT