தமிழகம்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்று சில மாவட்​டங்​களில் மித​மான மழை​யும், தேனி மாவட்​டத்​தில் கனமழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றின் வேகம் மாறு​பாடு காரண​மாக. தமிழகத்​தில் இன்று (ஜூன் 16), மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், நாமக்​கல், சேலம், திருச்சி, பெரம்​பலூர், அரியலூர், கள்​ளக்​குறிச்​சி, தஞ்​சாவூர், திரு​வாரூர் மற்​றும் மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும். தேனி மாவட்​டத்​தில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

17, 18 தேதி​களில் தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், ராம​நாத​புரம், மதுரை, மற்​றும் சிவகங்கை மாவட்​டத்​தில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை​யும் 19 முதல் 21-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை இன்று ஒருசில இடங்​களில் வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவு வரை உயரக்​கூடும். 17 முதல் 19-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​க​மான அளவை ஒட்​டியே இருக்​கக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​க பட்​ச​மாக கடலூர் மாவட்​டம் கொத்​த​வாச்​சேரி​யில் 7 செமீ, கடலூர் மாவட்​டம் வேப்​பூர், சேத்​தி​யாத்​தோப்​பு, குறிஞ்​சிப்​பாடி​யில் தலா 6 செமீ, காட்டு ம​யிலூர், குப்​பநத்​தம், கள்ளக்​குறிச்சி மாவட்​டம் கீழ்​படி ஆகிய இடங்​களில் தலா 5 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT