மதுரை: பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் இளைஞர் காசிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய வாழ்நாள் ஆயுள் சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த வர் காசி. இவர் பல பெண்களிடம் திருமணம் செய்துகொள்வ தாகக் கூறி நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர், அந்தப் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். புகாரின்பேரில் அவரை போலீஸார் 2020-ல் போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்து கைது செய்தனர்.
அவரிடம் பறிமுதல் செய்த மடிக்கணினி களில் 120 பெண்களின் 400-க் கும் மேற்பட்ட வீடியோ, ஆபாச புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காசிக்கு நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இயற்கையாக மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் காசி மேல்முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மனசாட்சியற்ற நபர்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நம்பிக்கையையும் உணர்ச்சிரீதியான பலவீனங் களையும் தங்களது சுயநல நோக்கங்களுக்கு தகாத வழியில் பயன்படுத்துகின்றனர்.
தந்திரமாக ஏமாற்றி, பொய் வாக்குறுதி அல்லது உணர்ச்சி ரீதியான சூழ்ச்சிமிக்க வற்புறுத்தல் மூலம், பாதிக்கப் பட்டவர்களை அந்தரங்கமான புகைப்படங்கள் அல்லது காணொலிகளை பகிரத் தூண்டுகின்றனர். பின்னர் நம்பிக்கைத் துரோகம் செய்து மிரட்டி பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து சுரண்டலுக்கும், அவமானம், மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர்.
இத்தகைய சூழ்நிலைகளில், அனைத்து சிறுமிகளிடமும், இளம்பெண்களிடமும் இந்த நீதிமன்றம் பணிவுடனும் மனமார்ந்த அக்கறையுடனும் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறது.
எந்த நபருடனும் மின்னணு வழியாக அந்தரங்கமான புகைப்படங்கள் அல்லது காணொலிகளைப் பகிரக் கூடாது. அதன்பிறகு சட்டரீதியான நிவாரணத்தை நாடும் வேதனையான செயல் முறையை எதிர்கொள்வதை விட, முன்னெச்சரிக்கை நட வடிக்கை எப்போதும் சிறந்தது.
எனவே, டிஜிட்டல் உலகில் தங்களது அந்தரங்கத்தையும், கண்ணியத்தையும் பாதுகாப்பதில் மிகுந்த விழிப் புணர்வுடனும் எச்சரிக்கை யுடனும் இருக்குமாறு ஒவ் வொரு சிறுமிகளையும், பெண்களையும் நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது.
இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. விசாரணை நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட முகாந்திரம் இல்லை. எனவே மேல்முறையீடு தள்ளுபடி செய் யப்படுகிறது. மனுதாரருக்கு நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.