சென்னை: ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வசதியான பயணத்துக்காகவும் சாதாரண பெட்டிகளுக்கு மாற்றாக, எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள் விரைவு ரயில்களில் இணைக்கப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயிலில் (22605) எல்எச்பி பெட்டிகள் நேற்று முதல் இணைத்து இயக்கப்பட்டன. திருச்செந்தூர் - எழும்பூர் விரைவு ரயிலில் (20606) இன்று முதல் (அக்.21) இணைத்து இயக்கப்பட உள்ளன.
இதேபோல், எழும்பூர் - ராமேசுவரம் சேது விரைவு ரயிலில் (22661) எல்எச்பி பெட்டிகளை நாளை (அக்.22) முதல் இணைத்து இயக்கப்படும். ஏற்கெனவே ராமேசுவரம் - எழும்பூர் விரைவு ரயிலில் (22662) எல்எச்பி பெட்டிகள் அக்.19 முதல் இணைத்து இயக்கப்பட்டன.