தமிழகம்

தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற வேண்டும்: தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்ப் புத்​தாண்டு அனை​வரது வாழ்​வும் ஏற்​றம் பெற உதவ வேண்​டும் என, குடியரசு துணைத் தலை​வர், ஆளுநர், கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன்: சர்​வதேச நாள்​காட்​டியை இன்று நாம் பின்​பற்​றும் அதே வேளை​யில், நாட்​கள், மாதங்​கள், வருடங்​களுக்​கும் தனித்​து​வம் வாய்ந்த பெயர்​களை சூட்​டும் நமது பாரம்​பரிய தமிழ் நாள்​காட்​டியை​யும் நாம் நினை​வில் கொள்ள வேண்​டும்.

          

நம் முன்​னோர் நமக்கு வழங்​கிய ஞானம் தான் நமது பாரம்​பரி​யம். அதை நாம் பாது​காத்து வரும் தலை​முறை​களிடம் கொண்டு செல்ல வேண்டும். இயற்கை வளங்​களுக்கு நம் மக்​கள் அளிக்​கும் மரி​யாதை, புத்​தாண்​டின் மற்​றொரு முக்​கிய அம்​ச​மாகும். நம் முன்​னோரின் ஆசிகளு​டன் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்​சி​யடைந்த இந்தி​யாவை உரு​வாக்​கு​வ​தில் வெற்றி பெறு​வதை நோக்கி நமது இளம் தலை​முறை​யினர் முன்​னேற வேண்​டும்.

தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர்: சூரியனின் சுழற்​சியை அடிப்​படை​யாக கொண்ட நாட்​காட்​டியை பயன்​படுத்​தும் நாம், சூரியன் மேஷ​ராசி​யில் நுழை​யும் நிகழ்வை ஆண்​டின் தொடக்​க​மாகக் கொண்​டாடி வரு​கிறோம். தமிழகத்​தில் தமிழ் வருடப் பிறப்​பு, கேரளத்​தில் விஷூ, அசாமில் பிஹூ, பஞ்​சாபில் பைசாகி என பல்​வேறு பெயர்​களில் இந்​நிகழ்​வானது நாடெங்​கிலும் பாரம்​பரிய​மாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. பரு​வங்​கள் மாறு​வது போல் நாம் நம்மை அவ்​வப்​போது மாற்றி அமைத்​துக் கொண்டு சுமுக​மான, நிறை​வான, மகிழ்ச்​சி​யான வாழ்க்​கையை வாழ வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி: புதிய சாதனை​கள் பலவற்​றைப் படைத்​து, புதிய வெற்​றிகளைப் பெற்​று, வழி மறிக்​கும் தடைகளை எல்​லாம் தகர்த்​து, அமை​தி​யான வாழ்​வைப் பெறு​வோம், வளமான தமிழ் நாட்​டைப் படைப்​போம் என இப்​புத்​தாண்​டில் நாம் அனை​வரும் ஒன்​றிணைந்து உறு​தி​யேற்​போம்.

ஒவ்​வொரு தமிழரின் உள்​ளத்​தி​லும் புதிய சிந்​தனை​கள், புதிய முயற்​சிகள், புதிய நம்​பிக்​கைகளோடு கூடிய புதிய உத்​வேகம் பிறக்​கட்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை: தமிழர்​களின் கலாச்​சா​ரத்​தை​யும், பண்​பாட்​டை​யும் பாது​காக்க வழி ஏற்​படுத்​தும் வகை​யில் நமது செயல்​பாடு​கள் அமைய வேண்​டும். இந்த தமிழ்ப் புத்​தாண்டு அனை​வரது வாழ்​வும் ஏற்​றம் பெற உதவ வேண்​டும்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: சித்​திரை முதல் நாளை முது​வேனில் காலத்​தின் தொடக்க நாளாக நெடுங்​கால​மாக தமிழ் மக்​கள் கொண்​டாடி வரு​கின்​றனர். தமிழகத்​தில் மலரட்டும் திரா​விட மாடல் நல்​லாட்சி என்ற உணர்​வுடன் தமிழ்் பெரு​மக்​களுக்கு சித்​திரைத் திரு​நாள் நல்​வாழ்த்​துகள்.

தமிழ் மாநில காங்​கிரஸ் தலை​வர் ஜி.கே. வாசன்: தமிழர்​களுக்கு சித்​திரை வருடப்​பிறப்பு வசந்த காலத்​தின் தொடக்​க​மாக அமைந்து தொன்​மை​யாக கொண்​டாடப்​படு​வது மகிழ்ச்​சிக்​குரியது. தமிழ் புத்​தாண்​டின் முதல் நாளில் அடி​யெடுத்து வைக்​கும் தமிழக மக்​களுக்கு இனி வரும் காலம் வசந்த கால​மாக அமைய வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: சித்​திரை மாதத்​தின் தொடக்​க​மான இந்நாள் தமிழர்​களின் வாழ்​வில் அமை​தி, வளம், முன்​னேற்​றம், மனநிறைவு, வெற்​றி, மகிழ்ச்​சி, நல்​லிணக்​கம் உள்​ளிட்ட அனைத்து நன்​மை​களும் நிறைவதன் தொடக்​க​மாக அமைய வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: பாரம்​பரியமிக்க பழமை​யிலும், தொன்​மை​யிலும், பன்​முகத் தன்​மை​யிலும் ஈடு இணை​யற்ற பண்​பாட்​டுப் பெரு​மைமிக்க தமிழ் மக்​கள் அனை​வரும் இணைந்து வரவேற்​கும் இந்த தமிழ்ப் புத்​தாண்​டு, மக்​கள் அனை​வருக்​கும் நல்ல மாற்​றங்​களை​யும், புதிய ஏற்​றங்​களை​யும் தரும் ஆண்​டாக அமையட்​டும்.

ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து: வளர்ச்​சி, அமை​தி, மகிழ்ச்சி மற்​றும் வளமுடன் இந்த ஆண்டு அனை​வருக்​கும் மிகச் சிறப்​பாக அமைய உலகெங்​கும் வாழும் தமிழ் மக்​கள் அனை​வருக்​கும் மனமார்ந்த வாழ்த்​துகள்.

தமிழக பாஜக நிர்​வாகி சரத்​கு​மார், பெருந்​தலை​வர் மக்​கள் கட்​சித் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் திரு​நாவுக்​கரசர், கோகுல மக்​கள் கட்சி தலை​வர் எம்​.​வி.சேகர்​, தமிழக முற்​போக்​கு மக்​கள்​ கட்​சித்​ தலை​வர்​ க.சக்​திவேல்​ உள்ளிட்​டோர்​ வாழ்​த்​து தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT