ஆகாஷ் டெல்​சன்

 
தமிழகம்

மானாமதுரையில் கைதி உயிரிழப்பு: போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மா​னாமதுரை​யில் கைதி மரணமடைந்த விவ​காரத்​தில் காவல்​துறை​யினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அரசி​யல் கட்சித் தலைவர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

மா​னாமதுரை​யில் 2 தொழிலா​ளர்​களை வாளால் வெட்​டிய வழக்​கில் கைதாகி, மருத்து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த இளைஞர் உயி​ரிழந்​தார். இந்த விவகாரத்துக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

          

பாமக தலை​வர் அன்​புமணி: கடந்த ஆண்டு திருப்​புவனம் காவல்​நிலை​யத்​தில் மடப்​புரம் அஜித்​கு​மார் அடித்து கொலை செய்​யப்​பட்ட நிலை​யில், இப்​போது மானாமதுரையில் ஆகாஷ் டெல்​சன் படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். திமுக ஆட்​சி​யில் மட்​டும் இது​வரை 27 காவல் ​நிலை​யச் சாவு​கள் நடந்​துள்​ளன.

திமுக ஆட்​சி​யில் மனித உயிர்​களுக்கு மரி​யாதை இல்​லை. ஆகாஷ் சித்​திர​வதைக் கொலைக்கு காரண​மான காவல் ​துறை​யினர் அனை​வரும் கைது செய்து சட்​டத்​தின் முன் நிறுத்தி தண்​டிக்​கப்பட வேண்​டும். ஆகாஷ் குடும்​பத்​திற்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு தர வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: தமிழகத்​தில் அன்​றாடம் அரங்​கேறும் குற்​றச்​சம்​பவங்​களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, மக்​களின் அதிருப்​தி​யைத் திசை​திருப்​பக் கைதி​கள் மீது இது​போன்ற சித்​ர​வதைகளை அரங்​கேற்​று​வதை வாடிக்​கை​யாகக் கொண்​டிருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

கைதி ஆகாஷின் குடும்​பத்​தினருக்கு உரிய இழப்​பீடு வழங்​கு​வதோடு, காவல்​துறை​யினர் சட்​ட​விரோத​மாகச் செயல்​பட்​டிருப்​பது உறு​தி​யா​னால் அனை​வர் மீதும் பாரபட்​சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

புதிய தமிழகம் கட்சி தலை​வர் கிருஷ்ன​சாமி: சிவகங்கை மாவட்​டத்​தில் உள்ள பெரும்​பாலான காவல் நிலை​யங்​களில் ஒரு குறிப்​பிட்ட சாதி​யினரே பொறுப்பு அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்​டிருப்​பது, இத்​தகைய மனித உரிமை மீறலுக்கு முக்​கியக் காரண​மாக அமை​கிறது. காவல்​துறை​யினர் மீது உடனடி​யாக கொலை வழக்​குப்பதிவு செய்​து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும்​.

SCROLL FOR NEXT