பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் கட்சி நிர்வாகிகள்.

 
தமிழகம்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: குடியரசு துணைத் தலைவர், முன்னாள் முதல்வர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

மதுரை: விடுதலைப் போராட்ட வீரர் பசும்​பொன் முத்​துராமலிங்​கத் தேவரின் பிறந்த நாள் மற்​றும் குருபூஜையையொட்டி அவரது நினைவிடத்​தில் குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், ஆளுநர் அர்​லேகர், தமிழக அமைச்​சர்​கள் மற்​றும் ஸ்டா​லின், பழனிசாமி உள்​ளிட்ட பல்​வேறு கட்​சித் தலை​வர்​கள், பொது​மக்​கள் மரியாதை செலுத்​தினர்.

பசும்​பொன் முத்​துராமலிங்​கத் தேவரின் 119-வது பிறந்​தநாள் மற்​றும் 64-வது குருபூஜை விழா, ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகேயுள்ள பசும்​பொன்​னில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், ஆளுநர் ராஜேந்​திர விஸ்வநாத் அர்​லேகர், முன்​னாள் மத்​திய அமைச்​சர் பொன்.ராதாகிருஷ்​ணன் ஆகியோர் தேவர் நினைவிடத்​தில் மாலை அணி​வித்து மரியாதை செலுத்​தினர். பின்பு, தேவர் வாழ்ந்த வீட்டை அவர்​கள் பார்​வை​யிட்​டனர்.

தமிழக அரசு சார்​பில் அமைச்​சர்​கள் நிர்​மல்​குமார், மதன்​ராஜா, வி.கே.ராஜீவ், ராம​நாத​புரம் மாவட்ட ஆட்சி​யர் சிவகுரு பிர​பாகரன் ஆகியோர் தேவர் நினைவிடத்​தில் மாலை அணி​வித்து மரியாதை செலுத்​தினர். அமைச்​சர் நிர்​மல்​குமார் கூறும்​போது, “முதல்​வர் விஜய் சென்னை நந்​தனத்​தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணி​வித்து மரியாதை செலுத்​தினார். பசும்​பொன் தேவர் நினைவிடத்​துக்கு முதல்​வர் விரைவில் வரு​வார்” என்​றார். பல்​வேறு அரசுத் துறைகளின் சார்​பில் 194 பயனாளி​களுக்கு ரூ.79.70 லட்​சம் மதிப்​பில் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்​டன.

திமுக தலை​வரும் முன்​னாள் முதல்​வரு​மான மு.க.ஸ்டா​லின், தேவர் நினைவிடத்​தில் மரியாதை செலுத்​தினார். அவருடன் முன்​னாள் அமைச்​சர்​கள் சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, ராஜகண்​ணப்​பன், பெரியகருப்​பன், மூர்த்தி, எம்​எல்​ஏக்​கள் காதர்​பாட்சா என்ற முத்​துராமலிங்​கம், செந்​தில்​குமார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

அதிமுக சார்​பில் அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரும் முன்​னாள் முதல்​வரு​மான பழனிசாமி, தேவர் நினைவிடத்​தில் மாலை அணி​வித்து மரியாதை செலுத்​தினார். அவருடன், முன்​னாள் அமைச்​சர்​கள் திண்​டுக்​கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணி​யன், செல்​லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், காம​ராஜ், மணிகண்​டன், ராஜேந்​திர பாலாஜி, அதிமுக அமைப்​புச் செய​லா​ளர் ராஜன் செல்​லப்பா, தர்​மர் எம்பி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

காங்​கிரஸ் சார்​பில் சுற்​றுலாத் துறை அமைச்​சர் ராஜேஷ்குமார், முன்​னாள் எம்பி திருநாவுக்​கரசர் ஆகியோ​ரும், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி.தினகரன், மதிமுக பொதுச்​செய​லா​ளர் வைகோ, நாதக ஒருங்​கி்ணைப்​பாளர் சீமான், வி.கே.சசிகலா, தமிழ்​நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறு​வனர் தனியரசு, தமிழ்​நாடு அனைத்து விவசாயிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழு தலை​வர் பிஆர்.பாண்​டியன், பாமக மாநிலப் பொருளாளர் தில​கபாமா, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்​பந்த தேசிக பர​மாச்​சா​ரிய சுவாமிகள், வீ த லீடர்ஸ் அமைப்​பினர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர் மரியாதை செலுத்​தினர்.

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். படம்: எல்.சீனிவாசன்

தமிழகம் முழு​வதும் இருந்து வந்​திருந்த ஆயிரக்​கணக்​கானோர் தேவர் நினைவிடத்​தில் மரியாதை செலுத்​தினர். சிலர் அலகு குத்​தி​யும், காவடி எடுத்து வந்​தும், முளைப்​பாரி​கள் எடுத்​தும் நேர்த்​திக்​கடன் செலுத்​தினர். தேவர் ஜெயந்​தியை முன்​னிட்டு தென்​மண்​டல ஐஜி விஜயேந்​திர பிதாரி தலை​மையில் மாவட்​டம் முழு​வதும் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

சென்னையில் முதல்வர் மரியாதை: சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கடரமணன், ராஜ்மோகன், மரிய வில்சன் தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT