தமிழகம்

திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம்!

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞரை வெளியேற்றவும், பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கின் மேல்முறையீடு மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் 3-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் அருணாசலம் ஆஜராகி இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.

அதற்கு நீதிபதிகள், மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இறுதி கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்றனர். இதை ஏற்க மறுத்த வழக்கறிஞர் அருணாச்சலத்தை வெளியேற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர் மீது பார்கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT