தமிழகம்

நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி

செய்திப்பிரிவு

மதுரை: சட்​டக் கல்​லூரி​களில் நிர்​வாக ஒதுக்​கீட்​டில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத உயர் நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

பாளை​யங்​கோட்டை ஆரியகுளம் பகு​தி​யைச் சேர்ந்த ஷைனி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: கீழ​வல்​ல​நாட்​டில் மகளிர் சட்​டக் கல்​லூரி உள்​ளது. தமிழ்​நாடு டாக்​டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக்​கழகத்​துடன் இணைக்​கப்​பட்​டுள்​ளது.

கல்​லூரி​யில் அரசு ஒதுக்​கீடு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்​டில் தலா 60 மாணவர்​களை சேர்க்க பல்​கலைக்​கழகம் அனு​மதி வழங்​கி​யுள்​ள​தாக கல்​லூரி நிர்​வாகம் தெரி​வித்​தது.

நான் 2025-26 ஆண்​டில் நிர்​வாக ஒதுக்​கீட்டு இடத்​தில் சேர்ந்​தேன். தேர்​வுக்கு தயா​ராகி வந்த நிலை​யில், 60 மாணவர்​களுக்கு மட்​டும் தேர்வு எழுத அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. நான் உட்பட மீத​முள்ள மாணவர்​கள் தேர்வு எழுத அனு​மதி கிடைக்​க​வில்லை எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

கல்​லூரி நிர்​வாக ஒதுக்​கீட்​டில் என்​னைப் போல் பல்​வேறு மாணவர்​கள் சேர்ந்​துள்​ளனர். தற்​போது தேர்வு நெருங்கும் நிலை​யில் எங்​களுக்கு தேர்வு எழுதவும் தேர்வுக் கட்​ட​ணம் செலுத்​த​வும் அனு​ம​திக்​க​வில்​லை.

இதனால் எங்​களின் கல்வி பாதிக்​கப்​படும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. எனவே 2025–2026 கல்​வி​யாண்​டுக்​கான சட்​டக்​கல்​வித் தேர்​வில் பங்​கேற்க அனு​ம​திக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இதே​ கோரிக்கையை வலியுறுத்தி பல்​வேறு சட்​டக் கல்​லூரி​களின் மாணவி​களும் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை நீதிபதி மும்​மினேனி சுதீர்​கு​மார் விசா​ரித்​தார்.

பின்​னர் நீதிப​தி, மாணவ மாண​வியர்​கள் பல்கலைக்​கழக தேர்வு எழுத அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக் கழகம் அனு​ம​திக்க வேண்​டும் என உத்​தர​விட்டு விசா​ரணையை முடித்து வைத்​தா​ர்.

SCROLL FOR NEXT