நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

‘தமிழகத்தில் அன்றாடம் சீரழியும் சட்டம் ஒழுங்கு’ - கடலூர் சம்பவத்துக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்னும் வார்த்தை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா? அல்லது ஒட்டுமொத்தமாக சமாதி கட்டப்பட்டுவிட்டதா?’ என கடலூர் விவசாயியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தில் நட்டநடு சாலையில் வைத்து 70 வயதான விவசாயி ஒருவரை மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

          

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்னும் வார்த்தை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா? அல்லது ஒட்டுமொத்தமாக சமாதி கட்டப்பட்டுவிட்டதா? தலைநகரிலும் பாதுகாப்பில்லை. கிராமத்திலும் பாதுகாப்பில்லை. பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை. வயதான முதியவருக்கும் பாதுகாப்பில்லை! வீட்டிலும் பாதுகாப்பில்லை, சாலையிலும் பாதுகாப்பில்லை.

இத்தகைய கொடூர ஆட்சியை மீண்டுமொரு முறை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து, மீண்டும் ஒரு நரக வேதனையை மக்கள் அனுபவிக்கத் தயாராக இல்லை! திமுகவை வெளியேற்றி, தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT