தமிழகம்

காசி தமிழ் சங்கமம் 4-வது பதிப்பு தமிழ் இந்தியாவின் பெருமிதம் என பிரதமர் மோடி உறுதிபடுத்தியுள்ளார்: எல்.முருகன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: ​காசி தமிழ்ச் சங்​கமம் நான்​காவது பதிப்பு மூலம் தமிழ் இந்​தி​யா​வின் பெரு​மிதம் என மோடி மீண்​டும் ஒரு​முறை உறு​திபடுத்​தி​யுள்​ளார் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: காசி தமிழ்ச் சங்​க மத்​தின் நான்​காவது பதிப்பு டிச.2-ம் தேதி (இன்​று) கோலாகல​மாக தொடங்​கு​கிறது. ஒவ்​வொரு ஆண்​டும் காசி தமிழ்ச் சங்​கமத்​துக்கு தமிழக மக்​களிடையே ஆதர​வும், வரவேற்​பும் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. இந்த ஆண்டு ‘தமிழ் கற்​கலாம்’ என்ற முழக்​கத்​துடன் நடை​பெறுகிறது.

வாரணாசி​யில் டிச.2 முதல் 15 வரை நடை​பெறும் இதில், தமிழகத்​தில் இருந்து 7 குழுக்​கள் காசிக்கு வருகை தந்து காசி​யின் பெரு​மை​யை​யும், தமிழகத்​துட​னான தொடர்​பை​யும் அறிந்து கொள்​வதுடன், ஆன்​மிக அனுபவத்​தைப் பெற இருக்​கின்​றனர்.

இரண்​டாம் கட்​ட​மாக, தமிழகத்​தில் டிச.15 முதல் 31 வரை நடை​பெறும் நிகழ்ச்​சி​யில், வாரணாசி​யில் இருந்து 300 மாணவர்​கள் பங்​கேற்​கின்றனர். இந்த பயணத்​தில் தமிழ் பண்​பாடு, புராதன​மான கலாச்​சா​ரம், நாகரீகதொடர்பு போன்​றவற்றை தெரிந்து கொள்​வதுடன், தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்ள இருக்​கின்​றனர்.

கூடு​தலாக, பள்​ளி​களில் தமிழ் மொழிமற்​றும் கலாச்​சா​ரத்தை அறி​முகப்​படுத்​த​வும், மாணவர்​களுக்​குத் தமிழ் கற்​பிக்​க​வும் தமிழகத்​தில் இருந்து 50 ஆசிரியர்​கள் காசிக்கு வரவுள்​ளனர்.

இதன்​மூலம், தமிழ் கலாச்​சா​ரம் உயர்​வானது, தமிழ் மொழி உயர்​வானது, தமிழ் இந்​தி​யா​வின் பெரு​மிதம் எனபிரதமர் மீண்​டும் ஒரு​முறை உறு​திபட கூறி​யுள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ‘அனை​வரும் தமிழ் மொழி கற்க வேண்​டும் எனும் காசி தமிழ்ச் சங்​கமத்​தின் கருப்​பொருளை நிறைவேற்​றும் வகை​யில், தமிழகத்​தில் வாழும் பிற மாநில மக்​களுக்​கும் தமிழ் மொழியை கற்​ப​தற்​கான சூழ்​நிலையை தமிழக அரசு ஏற்​படுத்தி தர வேண்​டும்​’ என குறிப்​பிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT