தமிழகம்

தமிழகத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை திமுக உருவாக்குகிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் செயற்​கை​யான எரிபொருள் தட்​டுப்​பாட்டை திமுக உரு​வாக்​கு​கிறது என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ஆந்​தி​ரா, புதுச்​சேரி, கர்​நாட​கா, கேரளா என எந்த மாநிலத்​தி​லும் பெட்​ரோல் பங்​கில் கூட்​டம் கிடை​யாது. திமுக​வினர் வேண்​டு​மா​னால், நேரில் வந்து பார்க்​கலாம்.

          

எங்​கும் இல்​லாத பதற்​ற​மான சூழ்​நிலையை தமிழகத்​தில் திமுக உரு​வாக்​கிக் கொண்​டிருக்​கிறது. பல நாடு​களில் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​பட்​டிருக்​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் அது​போன்ற சூழல் இல்​லை. தமிழகத்​தில் செயற்கை தட்​டுப்​பாட்டை திமுக அரசு உரு​வாக்​கு​கிறது. இது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது.

தமிழக பெண்​கள் மிகப்​பெரிய கோபத்​தில் இருக்​கிறார்​கள். அவர்​கள் நிச்​சய​மாக திமுக அரசை வீட்​டுக்கு அனுப்​பக்​கூடிய வேலையை செய்​வார்​கள். ரஜினி​காந்த் சினி​மா​வில் தனக்​கான தனி முத்​திரை பதித்​தவர்.

அவரை யாரும் மிரட்​ட​வும் முடி​யாது. தன் மீது அவதூறு பரப்​பி​னால், எந்த ஒரு மனிதனும் பொறுத்​துக் கொண்​டிருக்க மாட்​டார். தனது சுயமரி​யாதை பாதிக்​கும்​போது, ரஜினி​காந்த் அவரது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​து​வது சரி தான். அவருக்கு தே.ஜ.கூட்​ட​ணி ஆதர​வாக இருக்​கும்.

தேசிய ஜனநாயக கூட்​டணி தொகுதி பங்​கீட்​டில் எந்த கால​தாமத​மும் இல்​லை. உள்ளே நடக்​கும் வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்​கிறது.

எங்​களு​டைய தேசிய தலை​வர்​களிடம் பழனி​சாமி பேசிக் கொண்​டிருக்​கிறார். லெட்​டர் பேடு வைத்​திருப்​பவர்​களை எல்​லாம், ஒரு கட்​சி​யாக திமுக கணக்​கில் வைத்​திருக்​கிறது என்றார்.

SCROLL FOR NEXT