கிருஷ்ணசாமி | கோப்புப் படம்
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஜனவரி 7-ம் தேதிக்கு பிறகு தங்கள் கட்சியின் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்றார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறி, தவெக-வுடன் செல்லும் நிலை இருந்தது. தற்போது, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவர்கள் 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டை எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: எங்கள் தலைவர் கிருஷ்ணசாமி 1996-ல் சுயேச்சையாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ல் திமுக கூட்டணியில் இருந்தாலும் மிகக்குறைவான ஓட்டுகளில் தோல்வியை அடைந்தோம்.
2-வது முறையாக 2011-ல் அதிமுக கூட்டணியுடன் வெற்றி வெற்றார். இதன்பிறகு, பலமுறை தேர்தலில் போட்டியிட்டாலும் குறைவான ஓட்டுகளில் தான் தோல்வியை சந்தித்தோம். தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி வலுவாகவே உள்ளது.
அதிமுக கூட்டணியில் சேர நாங்கள் எதிர்பார்ப்பது 10 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா இடங்களையும் தான். இதை கொடுத்துவிட்டால், புதிய தமிழகம் கட்சி வாக்குகள் அப்படியே அதிமுக கூட்டணிக்கு வந்துவிடும். வெற்றிவாய்ப்பும் பிரகாசமாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.