கிருஷ்ணசாமி

 
தமிழகம்

“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வருக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவை: ​போதைப் பொருள் கடத்​தல் குற்​றச்​சாட்டு விவ​காரத்​தில் ஆதவ் அர்​ஜூ​னாவை அமைச்​சர் பதவியி​லிருந்​தும், கட்​சி​யில் இருந்​தும் முதல்​வர் விஜய் நீக்க வேண்​டும் என புதிய தமிழகம் கட்சித் தலை​வர் கிருஷ்ண​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

கோவை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழக அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வின் உறவினர்​களுக்கு போதைப் பொருள் கடத்​தல் கும்​பலுட​னான தொடர்​பு​ குறித்து வரும் தகவல்​கள் அதிர்ச்சி அளிப்​ப​தாக உள்​ளன. இதுகுறித்து சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற நடவடிக்​கைகளுக்​காக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத் துறை தெரி​வித்​துள்​ளது.

முதல்​வர் விஜய் ஊழலற்ற ஆட்​சி, மது போதை இல்​லாத ஆட்சி என்​ப​தைத்​தான் முக்​கிய வாக்​குறு​தி​யாக கொடுத்​துள்​ளார். இந்​நிலை​யில், தற்​போதைய குற்​றச்​சாட்டை எளி​தாக எடுத்​துக் கொள்​ளக்​கூ​டாது. இதை சர்​வ​தேச விவ​கார​மாக பார்க்க வேண்​டும். தீய ஆட்சி சென்று தூய ஆட்சி வர வேண்​டும். ஆனால், தூய ஆட்சி என்று சொல்​லக் கூடிய இந்த ஆட்​சி​யில் ஆதவ் அர்​ஜுனா முக்​கிய முக​மாக இருக்​கிறார். எனவே, அவரை அமைச்​சர் பதவி​யில் இருந்​தும், கட்​சி​யில் இருந்​தும் முதல்​வர் விஜய் நீக்க வேண்​டும். இந்த விஷ​யத்​தில் முதல்​வர் விஜய் மவுனம் சாதிக்கக் கூடாது. அது அவருக்கு ஆபத்​தாக மாறலாம்.

கரூர் விவ​காரத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட பணம் யாருடையது என கண்​டு​பிடிக்​கப்பட வேண்​டும்.அது ஆதவ் அர்​ஜுனா கொடுத்த பணம் என்​றால், அவருக்கு அந்த பணம் எங்​கிருந்து வந்​தது,இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த வேண்​டும். மத்​திய அரசும் இதில் எங்​களுக்கு தொடர்பு இல்லை என இருந்து விடா​மல் முழு​மை​யாக விசா​ரிக்க வேண்​டும். ஆளுநர் இதில் தலை​யிட வேண்​டும். சிபிஐ விசா​ரணை​யும் வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT