நாமக்கல்லில் பாஜக சார்பில் நடைபெற்ற சேவா ஜோதி யாத்திரையில் ஜோதியை ஏந்திச் சென்ற மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள்.
நாமக்கல்: நாமக்கல்லில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பொதுவாழ்வில் 25 ஆண்டுகால மக்கள் சேவையைக் கொண்டாடும் வகையில் சேவா ஜோதி யாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மற்றொரு கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை இழுத்து, இடைத்தேர்தல் நடைபெற காரணமாகியுள்ளார்.
எனவே, இடைத்தேர்தல் நடைபெற காரணமான முதல்வர் விஜய், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் தொகையை அவர் ஓரிரு தினங்களில் செலுத்துவார் என நினைக்கிறேன். அப்போதுதான் அவர் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார் என்பதையும் நம்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.