பாமக தலைவர் அன்புமணிக்கு கால் மூட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அன்புமணி, நலமுடன் உள்ளார்.
அடுத்த 2 வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருந்து, பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி மருத்து வர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.