கவின்.

 
தமிழகம்

கவின் ஆணவக் கொலை வழக்கு: பெண்ணின் பெற்றோருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

காதல் விவகாரத்​தால் மென்​பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் பெண்​ணின் தந்தை மற்​றும் தாயார் மீதான குற்​றப்​பத்​தி​ரிகை ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்து தமிழக அரசு தாக்​கல் செய்த மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்​கலத்​தைச் சேர்ந்த மென்​பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், திருநெல்​வேலியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்​ணைக் காதலித்து வந்​துள்​ளார்.

இரு​வரும் வெவ்​வேறு சமூகங்​களைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்​பிய நிலை​யில், கடந்த 2025 ஜூலை 27ஆம் தேதி திருநெல்​வேலி பாளை​யங்​கோட்டை கே.டி.சி நகரில் கவின் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார்.

இந்​தக் கொலை தொடர்​பாக சுபாஷி​னி​யின் சகோ​தரர் சுர்​ஜித் கைது செய்​யப்​பட்​டார். இதனை தொடர்ந்து நடை​பெற்ற விசா​ரணை​யில், சுர்​ஜித்​தின் பெற்​றோரும் காவல்​துறை உதவி ஆய்​வாளர்​களு​மான சரவணன், கிருஷ்ணகுமாரி மற்​றும் உறவினர் ஜெயபால் ஆகியோ​ரும் வழக்​கில் சேர்க்​கப்​பட்​டனர்.

இந்த வழக்​கில் தங்​களுக்கு எதிராக போதிய ஆதா​ரங்​கள் இல்லை எனக்​கூறி சரவணன் மற்​றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சென்னை உயர்​நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் வழக்கு தொடர்ந்​தனர், இந்த மனுக்​களை விசா​ரித்த நீதி​மன்​றம், இரு​வருக்​கும் எதிரான குற்​றப்​பத்​தி​ரி​கையை ரத்து செய்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு கடந்த அக்​டோபர் 16ஆம் தேதி உச்​சநீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​தது.

இந்த மேல்​முறையீட்டு மனு உச்​சநீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்​றும் ஸ்ரீசந்​திரசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, ஒரு குற்​றவியல் வழக்கு எவ்​வாறு கையாளப்​படக் கூடாதோ அவ்​வாறு இந்த வழக்கு கையாளப்​பட்​டுள்​ள​தாகக் குறிப்​பிட்ட நீதிப​தி​கள், தமிழக அரசு தாக்​கல் செய்த மேல்​முறையீட்டு மனுவைத் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT