தமிழகம்

காசிமேடு மீனவர்கள் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: காசிமேடு மீன்​பிடி துறை​முக அனைத்து விசைப்​படகு மீனவர் சங்க சார்​பில் அதன் ஒருங்​கிணைப்​பாளர் விஜேஷ் கூறிய​தாவது: சென்​னை, திரு​வள்​ளூர் மாவட்ட விசைப்​படகு​களை ஆந்​திர அரசு சிறை பிடித்து விடுவிக்​க​வில்​லை.

தமிழக அரசு மற்​றும் மீனவர்​களின் கோரிக்​கைகளை ஏற்க மறுப்​ப​தால், ஆந்​திர மாநில கடல் உணவு​கள், பிற மீன் வகைகளுக்கு தமிழகத்​தில் தடை விதிக்க வேண்​டும்.

புதுச்​சேரி, காரைக்​கால் யூனியன் பிரதேச விசைப்​படகு​கள் அதிககுதிரை திறன் கொண்ட இன்​ஜின் பொருத்​தி, தொடர்ந்து ஆந்​திர, தமிழக கடலோர பகு​தி​களில் அத்​து​மீறி மீன் பிடிப்​ப​தால் ஆந்​திரா, தமிழக மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படு​கிறது.

அதனால் இது தொடர்​பாக முதல்​வர் விஜய், புதுச்​சேரி மாநில அரசுடன் பேசி அதிக குதிரை திறன் கொண்ட இன்​ஜின்​களை பயன்​படுத்த தடை விதிக்க வேண்​டும்.

இக்​கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். அன்று ஒருநாள் அடை​யாள வேலை நிறுத்​த​மும் நடை​பெறும்​. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT