தமிழகம்

கரூர் நெரிசல் வழக்கு: தவெக தலைவர்கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்​கு​ குறித்து முதல்​வர் விஜய் உள்​ளிட்ட தவெக தலை​வர்​கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​துள்ளது.

கரூரில் கடந்த செப்​டம்​பர் 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா மற்​றும் பாதிக்​கப்​பட்​டோர் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் கடந்த அக்​டோபர் மாதம் பிறப்​பித்த இடைக்​கால உத்​தர​வில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட்​டது. விசா​ரணையை உச்ச நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மை​யிலான குழு கண்​காணிக்​கும் என்​றும் தெரி​வித்தது.

இதனிடையே, இந்த விவ​காரத்​தில் திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்.எஸ்.பாரதி சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள இடை​யீட்டு மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கரூர் ஒரு முக்​கிய​மான ஊர் என்​றும் அங்கு எங்களுக்கு கணக்கு வழக்கு உள்​ளது என்​றும், அந்​தக் கணக்கு வழக்கை முடிக்​காமல் விட​மாட்​டோம். இதற்​குப் பதிலடி கொடுக்​கப்​படும். சட்​டம் தன் கடமை​யைச் செய்​யும்” என்​றும் பேசி உள்​ளார். இது போன்று பொது வெளி​யில் பேசி​யது ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

அரசு வேலை, கருணைத் தொகை: கரூர் துயர சம்பவ வழக்​கின் புலன் விசா​ரணை நடை​பெறும் போதே, ஆதவ் அர்​ஜு​னா​வின் பேச்​சுப் புலன் விசா​ரணை​யில் தலை​யிடு​வ​தாக உள்​ளது. இதனிடையே, ஜூலை 10-ஆம் தேதி முதல்​வர் விஜய் கரூர் சென்று கூட்​டத்​தில் பலி​யான, காயமடைந்த குடும்​பத்​தா​ருக்கு அரசு வேலைக்​கான உத்​தர​வு​களை வழங்க இருப்​ப​தாக ஊடகங்​களில் செய்தி வெளி​யாகி​யுள்​ளது. மேலும் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தா​ருக்கு 10 லட்​சம் ரூபாய் கருணைத் தொகை வழங்​கப்​படும் என்​றும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது​வும் சிபிஐ புலன் விசா​ரணை​யைப் பாதிக்​கும். அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வின் பேச்சு உச்​சநீ​தி​மன்ற உத்​தரவை அவம​திப்​ப​தாக​வும் உள்​ளது. இதற்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தனி​யாகத் தாக்​கல் செய்​யப்​படும்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்​கின் புலன்​வி​சா​ரணையை சிபிஐ நிறைவு செய்​யும் வரை, தமிழக முதல்​வர் விஜய்​யும், வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, ஆனந்த், சி.டி. நிர்​மல் குமார் உள்​ளிட்​டோரும் எதிர்க்​கட்​சிகளை மிரட்​டும் வகை​யிலும், வழக்கு குறித்து பேசவும் தடை விதிக்க வேண்​டும்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்​கில் சிபிஐ​யின் புலன்​வி​சா​ரணை​யின் நேர்மை தன்​மையை உறுதி செய்​ய வேண்டும். வழக்​கில் சாட்​சிகளை​யும் ஆதா​ரங்​களை​யும் கலைக்​கும் வகை​யில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு எதி​ராக வழக்​குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்​தர​விட வேண்​டும்​. இவ்​வாறு அந்​த மனு​வில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT