தமிழகம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: திமுக இடையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்​கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்​தில் திமுக தாக்​கல் செய்த இடையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரு​கிறது.

கரூரில் கடந்த செப்​டம்​பர் 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயிரிழந்​தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக தவெக தேர்​தல் பிரசார மேலாண்மை பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா மற்றும் பாதிக்​கப்​பட்​டோர் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் கடந்த அக்​டோபர் மாதம் பிறப்​பித்த இடைக்​கால உத்​தர​வில், கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட்​டது.

இதற்கிடையே, இந்த விவ​காரத்​தில் திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்.எஸ்.பாரதி சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள இடையீட்டு மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா, ‘‘கரூரில் ஒரு கணக்கு வழக்கு உள்​ளது. அதை முடிக்​காமல் விட​மாட்​டோம். இதற்​குப் பதிலடி கொடுக்​கப்​படும். சட்​டம் தன் கடமை​யைச் செய்​யும்” என்​று பேசி உள்​ளார். அவரது பேச்சு புலன் விசா​ரணை​யில் தலை​யிடு​வ​தாக உள்​ளது.

இதற்கிடையே, ஜூலை 10-ம் தேதி முதல்​வர் விஜய் கரூர் சென்று கூட்​டத்​தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்​கான உத்​தர​வு​கள், ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்க இருப்​ப​தாக செய்தி வெளியாகியுள்ளது. இது​வும் சிபிஐ புலன் விசா​ரணை​யை பாதிக்கும்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்​கின் புலன்​ வி​சா​ரணையை சிபிஐ நிறைவு செய்​யும் வரை, தமிழக முதல்​வர் விஜய், வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள அமைச்சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, ஆனந்த், நிர்மல் குமார் உள்​ளிட்டோர் எதிர்க்​கட்​சிகளை மிரட்​டும் வகையிலும், வழக்கு குறித்தும் பேச தடை விதிக்க வேண்​டும்.

பாதிக்​கப்​பட்ட நபர்​களுக்கு எவ்​வித நலத்​திட்​டங்​களை​யும் சிபிஐயிடம் தாக்​கல் செய்​து​விட்​டு, உச்ச நீதி​மன்றம் வகுக்​கும் விதி​களின்படி வழங்குமாறு உத்​தர​விட வேண்​டும். சாட்​சிகள், ஆதா​ரங்களை கலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு எதி​ராக வழக்​கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அந்த மனு​வில் கூறப்​பட்​டுள்​ளது.

உச்​சநீ​தி​மன்ற நீதிப​தி​கள் அமானுல்லா கான், ஷீல் நாகு அமர்வு முன்பு மூத்த வழக்​கறிஞர் ஹுஸேபா அகமதி ஆஜராகி, “இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளவர்​கள், தற்​போது அமைச்​சர்​களாக இருப்​பவர்​கள். சாட்​சி​யங்​களைக் கலைக்க முற்​படு​கின்​றனர். இதன் ஒரு பகு​தி​யாக கரூரில் ஜூலை 10 -ம் தேதி நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது. மனுவை உடனே வி​சா​ரிக்க வேண்​டும்” என்று முறை​யிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட உச்​ச நீதி​மன்​றம்​ மனுவை இன்​று விசாரிக்​க ஒப்​புக்​ ​கொண்​டுள்​ளது.

வரும் 10-ம் தேதி முதல்​வர் விஜய் கரூர் சென்று, பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​திக்க திட்​ட​மிட்​டுள்ள நிலை​யில், உச்ச நீதி​மன்​றத்​தில் இன்று வழக்கு விசா​ரணைக்கு வர இருப்​பது முதல்​வருக்கு சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ள​தாக கருதப்​படு​கிறது.

SCROLL FOR NEXT