தமிழகம்

எனது யோசனையை என்னுடைய கட்சியிலேயே யாரும் கேட்பதில்லை: கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: எனது யோசனையை என்​னுடைய கட்​சி​யிலேயே யாரும் கேட்​ப​தில்லை என கார்த்தி ப.சிதம்​பரம் எம்​.பி. தெரி​வித்​தார்.

மதுரை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: புதிய அரசுக்கு பணி​யாற்ற போதிய கால அவகாசம் வழங்க வேண்​டும். பெரும்​பாலான அமைச்​சர்​கள் முதன்​முறை​யாகப் பொறுப்​பேற்​றிருப்​ப​தால் நிர்​வாகத்​தில் நிலைபெற அவகாசம் தேவை. 5 ஆண்​டு​களுக்கு தவெக ஆட்சி கலை​யாது. வெளி​யில் இருப்​போர் ஆட்​சி​யைக் கவிழ்க்க நினைத்​தா​லும் வெற்​றியடை​யாது.

காங்​கிரஸ் அமைச்​சர் விசுவ​நாதன் பற்றி ஆளுநரிடம் கொடுத்த புகார் தேவையில்​லாத சர்ச்​சை. ஆளுநருக்கு வைகை ஆற்றை ஆய்வு செய்ய அதி​காரம் கிடை​யாது. ஆளுநர்​களும் அரசி​யல் சாசனத்​துக்கும் மேலே செயல்​படு​கின்​றனர். அடுத்த சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 2031-ல்​தான் நடக்​கும். பட்​ஜெட்​டுக்கு பிறகு தவெக ஆட்சி மீது விமர்​சனம் வைப்​போம். அரசு வழக்​கறிஞர் நியமனத்தில் ஊழல் நடந்​திருப்​ப​தாக எழும் குற்​றச்​சாட்டு பற்றி தெரி​யாது.

அதி​முக தலைமை மீது நம்​பிக்கை இல்​லாமல் சிலர் விலகுகின்றனர். அதி​முக இருக்க வேண்​டும். அது அழி​வது ஜனநாயகத்துக்கும் சரியல்ல. யாரை​யும் தவெக சேர்த்​துக் கொள்ள வேண்​டாம். பெரும்​பான்மை இருக்​கிறது. அவர்​கள் எதற்காக ராஜி​னாமா செய்​துவிட்டு வரு​கின்​றனர் என சிந்​திக்க வேண்​டும். எனது யோசனையை என்​னுடைய கட்​சி​யிலேயே யாரும் கேட்​ப​தில்​லை. மற்ற கட்​சியிலா கேட்​கப் போகின்​றனர். காங்​கிரஸ் புதிய தலை​வருக்கு வாழ்த்​துகள். இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT