தமிழகம்

“முந்தைய காலத்தில் தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது” - திருப்பரங்குன்றம் கோயில் முதல் ஸ்தானிகர் தகவல்

“இடைக்காலத்தில்தான் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு மாறியது”

செய்திப்பிரிவு

மதுரை: மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில்​தான் முந்​தைய காலத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட்​டது. ஆகம விதி என இடைப்​பட்ட காலத்​தில்​தான் உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் முன் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​படு​கிறது என திருப்​பரங்​குன்​றம் கோயில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் பட்​டர் தெரி​வித்​தார்.

உச்ச நீதி​மன்ற உத்​தரவுப்​படி கார்த்​திகை தீபத்​தன்று திருப்​பரங்​குன்​றம்​மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்​றவில்லை. இது தொடர்​பாக மாவட்ட ஆட்சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா, உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த அறிக்​கை​யில் மன்​னிப்பு கோரினார். கோயில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின்​படியும், ஸ்தானிகர்​களின் கருத்​துகளின் அடிப்​படை​யிலும் வழக்​க​மான இட​மான உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் அருகே கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட்​ட​தாக ஆட்சி​யர் கூறியுள்​ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த கோயில் ஸ்தானிக பட்​டர்​கள் சுவாமிநாதன், பாலசுப்​பிரமணி​யன், சொக்கு சுப்​பிரமணி​யன், சண்​முக சுந்​தரம் ஆகியோர் நவ.24-ம் தேதி கோயில் துணை ஆணை​யர், அறங்​காவலர் குழுத் தலை​வர் மற்​றும் அறங்​காவலர்​களுக்கு கடிதம் அனுப்​பினர். அதில், ‘அறங்​காவலர்​கள் குழு தீர்​மானத்​தின்​படி உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் தீப மண்​டபத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட்​டது என அறி​விப்பு வெளி​யிட்​டதை அறிந்​தோம்.

ஆனால், அந்த இடத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வது தொடர்​பாக நாங்​கள் எந்த ஒரு கடிதமும் கோயில் நிர்​வாகத்​துக்கு வழங்​க​வில்லை. உச்​சிப்​பிள்​ளை​யார் கோயி​லில் தீபம் ஏற்​று​வது சம்​பந்​த​மாக 2025-ம் ஆண்​டுதான் கடிதம் அளித்​துள்​ளோம். உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி மலை உச்​சி​யிலுள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வது சம்​பந்​த​மாக நாங்​கள் எந்த ஒரு கருத்​தும் கூறவில்லை’ என தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், திருப்​பரங்​குன்​றம் முருகன் கோயில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் பட்​டர் நேற்று கூறும்​போது, “மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில்​தான் முந்​தைய காலத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட்​டது. ஆகம விதி என இடைப்​பட்ட காலத்​தில்​தான் உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் முன் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​படு​கிறது. அதற்கு முன்​புவரை அந்த இடத்​தில் தீபம் ஏற்​றியதில்லை. மலை உச்​சி​யில்​தான் தீபம் ஏற்​றப்​பட்​டது.

மலை உச்​சி​யிலுள்ள தீபத் தூணுக்கு செல்​லும் பாதையை முறைப்​படுத்தி, படிகள் கட்​டிக் கொடுத்து, மின் விளக்​கு​கள் வசதி செய்து கொடுத்​தால் நிச்​சயம் தீபம் ஏற்​றப்​படும்” என்​றார்.

1996-ம் ஆண்டு முதல்

ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், பாலசுப்பிரமணியன், சொக்குசுப்பிரமணியன், சண்முக சுந்தரம் ஆகிய 4 பேரும் கோயில் அதிகாரிகளிடம் நேற்று ஒரு கடிதம் அளித்துள்ளனர். அதில், ‘1996-ம் ஆண்டு முதல் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில், கோயில் வழிகாட்டுதலின் படியும், சைவ சமய நெறிமுறைகளின் படியும் கார்த்திகை தீபம் ஏற்றி வருகிறோம்.

இந்த கருத்துரையை எழுத்துப்பூர்வமாக 7-11-2013-ம் தேதியும், 4-12-2025-ம் தேதியும் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு வருடமும், எங்களின் கருத்துகளை வாய்மொழியாகவோ, தேவைப்பட்டால் எழுத்து மூலமாகவோ பெற்றுக்கொண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT