மேகேதாட்டில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தமிழக எல்லையான ஜூஜூவாடியில் தமிழக அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் போலீஸார் நிறுத்தினர்.

 
தமிழகம்

கர்நாடகாவில் கடையடைப்பு போராட்டம்: தமிழக பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின

செய்திப்பிரிவு

ஓசூர்: மேகே​தாட்​டு​வில் அணை கட்ட வலி​யுறுத்தி கர்​நாடக மாநிலத்​தில் நேற்று முழு கடையடைப்பு போராட்​டம் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் ஓசூர் வழி​யாக தமிழக அரசு பேருந்​துகள் வழக்​கம்​போல் பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​பட்​டன.

காவிரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்​டு​வில் அணை கட்ட வலி​யுறுத்​தி​யும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்​கும் தமிழக அரசைக் கண்​டித்​தும் கர்​நாடக மாநிலத்​தில் நேற்று முழு அடைப்பு போராட்​டத்​தில் ஈடு​படு​வ​தாக கன்னட அமைப்​பினர் அறி​வித்​திருந்​தனர்.

இதனால் நேற்று காலை தமிழக எல்​லை​யான ஜூஜூ​வாடி​யில் தமிழக போலீ​ஸாரும், கர்​நாடக மாநில எல்​லை​யான அத்​திப்​பள்​ளியில் கர்​நாடக போலீ​ஸாரும் பாதுகாப்​புக்​காக குவிக்​கப்​பட்​டிருந்​தனர். இருப்​பினும் காலை முதல் வழக்​கம்​போல தமிழக அரசு பேருந்​துகள் கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வுக்கு சென்று வந்​தன.

கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: இந்​நிலை​யில், கன்னட ஜாக்​ருதி வேதிகே அமைப்​பின் தலை​வர் மஞ்​சு​நாத் தேவா தலை​மை​யில் 50-க்​கும் மேற்​பட்​டோர் அத்​திப்​பள்​ளி​யிருந்து பேரணி​யாக வந்து கர்​நாடக நுழைவு பகு​தி​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனால் தமிழக எல்​லை​யான ஜூஜூ​வாடி​யில் தமிழக பேருந்​துகள் மற்​றும் கார், லாரி​களை தமிழக போலீ​ஸார் தடுத்து நிறுத்​தி​ய​தால், பொது​மக்​கள் தமிழக எல்​லை​யிருந்து கர்​நாடக மாநிலத்​துக்கு நடந்து சென்று அங்​கிருந்து ஆட்​டோ​வில் அத்​திப்​பள்​ளிக்​குச் சென்​றனர். பின்​னர் அங்​கிருந்து பிற ஊர்​களுக்​குச் சென்​றனர்.

இதற்​கிடையே, ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட கன்னட அமைப்​பினரை கர்​நாடக போலீ​ஸார் கைது செய்து வேனில் ஏற்​றிச் சென்ற பிறகு ஜூஜூ​வாடி​யில் நிறுத்​தப்​பட்ட தமிழக பேருந்​துகள் உள்​ளிட்ட வாக​னங்​களை சுமார் 15 நிமிடங்கள் கழித்து கர்​நாடக மாநிலத்​துக்​குள் செல்ல அனு​ம​தித்​தனர். அதன்​பிறகு, எந்த தடங்​கலும் இல்​லாமல், நாள் முழு​வதும் தமிழக பேருந்​துகள் பெங்​களூருக்​குச் சென்​றன.

இதுகுறித்து தமிழக போலீ​ஸார் கூறும்​போது. “கர்​நாடக மாநிலத்​தில் கன்னட அமைப்​பினர் முழு அடைப்பு போராட்​டம் அறி​வித்​திருந்​தா​லும், அங்கு 80 சதவீதம் கடைகள் திறந்​திருந்​தன. இதனால், தமிழக அரசுப் பேருந்​துகள் வழக்​கம்​போல சென்று வந்​தன. மாநில எல்​லை​யில் கன்னடஅமைப்​பினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​ட​போது மட்​டும் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. அவர்​கள் கைது செய்​யப்​பட்ட பிறகு வழக்​கம்​போல் வாக​னங்​கள் இயக்​கப்​பட்​டன” என்​றனர்​.

SCROLL FOR NEXT