மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து தமிழக எல்லையை நோக்கி காலி குடங்களுடன் பேரணியாக வந்த கன்னட அமைப்பினர்.

 
தமிழகம்

மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி கன்னட அமைப்பினர் மறியல்: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

8 மணி நேரம் பயணிகள் கடும் அவதி

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ​கா​விரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்​டு​வில் அணை கட்ட வலி​யுறுத்​தி​யும், அதற்கு எதிர்ப்பு தெரி​விக்கும் தமிழக அரசைக் கண்​டித்​தும், கர்​நாடக மாநில எல்​லை​யான அத்​திப்​பள்​ளி​யில் கன்னட அமைப்​பினர் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதனால், தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்​குச் செல்​லும் அரசுப் பேருந்​துகள் ஓசூரில் நிறுத்​தப்​பட்​டன.

மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் கர்​நாடக அரசின் முயற்​சிக்கு தமிழக அரசு மற்​றும் அனைத்​துக் கட்​சிகள், விவ​சாய அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்த சூழலில், மேகே​தாட்​டு​வில் கர்​நாடக அரசு உடனே அணை கட்ட வேண்​டும் என வலி​யுறுத்​தி, கன்னட ஜாக்​ருதி வேதிகே அமைப்​பின் சார்​பில் கர்​நாட​கா​வில் தமிழக எல்​லையை ஒட்​டி​யுள்ள அத்​திப்​பள்​ளி​யில் நேற்று சாலை மறியல் போராட்​டம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு செல்​லும் தமிழக அரசுப் பேருந்​துகள் நேற்று அதி​காலை 4 மணி முதல் ஓசூரில் நிறுத்​தப்​பட்​டன. அதே​நேரம், தமிழகப் பதிவெண் கொண்ட கார்​கள், கனரக வாக​னங்​கள் மற்​றும் கர்​நாடக அரசு, தனி​யார் பேருந்​துகள் வழக்​கம்​போல இயக்​கப்​பட்​டன. இரு மாநில எல்​லைப் பகு​தி​களி​லும் அந்​தந்த மாநில போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

நண்​பகல் 12 மணி அளவில் கன்னட ஜாக்​ருதி வேதிகே அமைப்​பின் தலை​வர் மஞ்​சு​நாத் தேவா தலை​மை​யில் 100-க்​கும் மேற்​பட்​டோர் காலி குடங்​களு​டன் அத்​திப்​பள்​ளி​யில் இருந்து ஊர்​வல​மாகப் புறப்​பட்டு தமிழக எல்​லையை நோக்கி வந்​தனர். அவர்​களை கர்​நாடக போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதையடுத்​து, ஓசூர் - பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் மஞ்​சு​நாத் தேவா கூறிய​தாவது: பரு​வ​மழை போதிய அளவில் பெய்​யாத​தால் காவிரி​யின் முக்​கிய அணை​களில் நீர்​மட்​டம் குறைந்​து, குடிநீர் தட்​டுப்​பாடு ஏற்​படும் நிலை உரு​வாகி​யுள்​ளது.

சில ஆண்​டு​களுக்கு முன்பு தமிழக அரசு ஒகேனக்​கல் கூட்​டுக் குடிநீர் திட்​டத்தை செயல்​படுத்​தி​ய​போது, குடிநீர் தேவையை கருத்​தில் கொண்டு நாங்​கள் ஒத்​துழைப்பு அளித்​தோம். அதே​போல, தற்​போது பெங்​களூரு மக்​களின் குடிநீர் தேவைக்​காக மேகே​தாட்​டு​வில் அணை கட்​ட தமிழகம் ஆதரவு அளிக்க வேண்​டும்.

கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் ஆக.3-ம் தேதி தமிழக முதல்​வர் விஜய்யை சந்​திக்க உள்​ளார். அப்​போது, இரு மாநிலங்​களுக்​கும் ஏற்ற சுமுக​மான முடிவை எடுக்க வேண்​டும். தமிழக அரசு தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்​தால், போராட்​டம் தீவிரப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்​து, போராட்​டத்​தில் ஈடு​பட்ட அனை​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். மதி​யம் 1 மணிக்​குப் பிறகு, ஓசூரில் நிறுத்​தப்​பட்​டிருந்த தமிழக அரசுப் பேருந்​துகள் வழக்​கம்​போல கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்​டன. பேருந்​துகள் 8 மணி நேர​மாக நிறுத்​தப்​பட்​ட​தால்​, பயணி​கள்​ கடும்​ அவதியடைந்​தனர்​.

SCROLL FOR NEXT