அதிமுக மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் வாக்கு சேகரித்த வேட்பாளர் கணிதா சம்பத். உடன் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்எல்ஏ தன்சிங் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

மதுராந்தகத்தில் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே போட்டி: அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: தர்​மத்​துக்​கும் அதர்​மத்​துக்கு இடையே போட்டி நடப்​ப​தாகக் கூறி மது​ராந்​தகம் அதி​முக வேட்பாளர் கணிதா சம்​பத் பிரச்​சா​ரம் செய்​தார்.

அவரை ஆதரித்​து, சிட்​ல​பாக்​கம் ச.ராஜேந்​திரன் தலை​மை​யில் வாக்கு சேகரிப்பு நடை​பெற்​றது. இதன்​படி தொன்​னாடு, நீலமங்​கலம், மேல்​வசலை, கீழ்​வசலை உள்​ளிட்ட பகு​தி​களில் நேற்று பிரச்​சா​ரம் நடை​பெற்​றது. இதில் முன்​னாள் அமைச்​சர் டி.கே.எம்​.சின்​னை​யா, முன்​னாள் எம்​எல்ஏ தன்​சிங், ஜெயபிர​காஷ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

பிரச்​சா​ரத்​தின்​போது கணிதா சம்​பத், 2011-16 கால​கட்​டத்​தில் எம்​எல்​ஏ​வாக இருந்​தபோது செயல்​படுத்​திய திட்​டங்​க​களை எடுத்​துக் கூறி வாக்கு கோரி​னார்.

மேலும், “இந்​தத் தேர்​தல் தர்​மத்​துக்​கும் அதர்​மத்​துக்​கும் இடையி​லான தேர்​தல். தர்​மம் வெற்றி பெற வேண்​டும். துரோகம் செய்​தவர்​களுக்கு மக்​கள் தங்​களது வாக்​கு​கள் மூலம் தக்க பாடம் புகட்ட வேண்​டும்” எனக் கூறினார்.

SCROLL FOR NEXT