கனிமொழி எம்.பி. | கோப்புப் படம்

 
தமிழகம்

“ஆளும்கட்சியின் ஐடி விங்க் போல காவல்துறை செயல்படக் கூடாது” - கனிமொழி எம்.பி. கருத்து

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ஆளும்கட்சியின் ஐடி விங்க் போல காவல்துறை செயல்படக்கூடாது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு தமிழகம் முழுவதும் இதுவரை 50 கைதிகளுக்கு மேல் சிறைகளில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஒரே நாளில் 17 கைதிகள் தப்பிச் செல்லக்கூடிய அவலமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

நடக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டும்போது, காவல் துறையினர் ஆளும்கட்சிக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாகவும், அரசியல் தலைவர்களுக்கு பதில் சொல்லக் கூடியவர்களாகவும் மாறியிருக்கின்றனர். காவல் துறை அவர்களுடைய பணிகளை செய்ய வேண்டுமே தவிர, ஆளும்கட்சியின் ஐடி விங்க் போல செயல்படக் கூடாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 31-ம் தேதி திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஆவின் பொருட்களின் விலையையாவது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதையும் அவர்கள் செய்யவில்லை. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT