தமிழகம்

“நம்மை பலப்படுத்தி கொண்டால் திமுக வெற்றி சாத்தியமாகும்” - கனிமொழி எம்.பி. விளக்கம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: நம்மை பலப்​படுத்​திக் கொண்​டால் யாரும் இல்​லாமல் திமுக​வால் வெற்றி பெற முடி​யும் என கட்சி நிர்​வாகி​களிடம் கனி​மொழி எம்​.பி. தெரி​வித்​தார்.

தூத்​துக்​குடி வடக்கு மாவட்ட திமுக நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் கட்சி அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது. சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் மார்க்​கண்​டேயன் (விளாத்​தி​குளம்), கருணாநிதி (கோ​வில்​பட்​டி), தூத்​துக்​குடி மேயர் ஜெகன் பெரிய​சாமி, வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் பி.கீ​தாஜீவன் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

இதில் கனி​மொழி பேசி​ய​தாவது: நடந்து முடிந்த சட்டப்​பேரவை தேர்​தலில் நாம் எதிர்​பா​ராத வகை​யில் தோல்​வியை தழு​வி​யுள்​ளோம். அதுகுறித்து ஆய்வு செய்ய, தலை​வர் ஸ்டா​லின் குழு அமைத்​துள்​ளார். அந்த குழு​வினரிடம் கட்சி நிர்​வாகி​கள் உண்மை நில​வரங்​களை தயக்​கமின்றி கூற வேண்​டும். அது நமது கட்​சியை மறுகட்​டமைப்பு செய்ய உதவி​யாக இருக்​கும். மேலும், கூட்​டணி பற்றி சிந்​திக்க வேண்​டிய காலக்​கட்​டத்​தில் இருக்​கிறோம். நம்மை நாம் பலப்​படுத்​திக் கொண்​டால், யாரும் இல்​லாமல் திமுக​வால் வெற்றி பெற முடி​யும். இவ்​வாறு பேசி​னார்.

வாக்​களித்த வாக்​காளர்​களுக்கு நன்றி தெரி​விப்​பது, ஜூன் 3 கருணாநிதி பிறந்த நாளை சிறப்​பாக கொண்​டாடு​வது உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. முக்கிய நிர்​வாகி​கள் கலந்து கொண்​டனர்.

SCROLL FOR NEXT