பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்திக்க வந்த கனிமொழி எம்.பி. உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள்.படம்: மு.லெட்சுமி அருண்

 
தமிழகம்

சிறையில் உள்ள திமுக எம்எல்ஏவை சந்தித்து கனிமொழி ஆறுதல்: ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி/ தூத்துக்குடி: தவெகவுக்கு மக்​கள் மீதும் ஜனநாயகத்​தின் மீதும் அக்​கறை இல்லை என திமுக துணை பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி. விமர்சித்துள்ளார்.

தமிழக முதல்​வர் விஜய் குறித்து ஒரு​மை​யிலும், மிரட்​டும்வித​மாக​வும் பேசி​ய​தாக விளாத்​தி​குளம் திமுக எம்​எல்ஏ மார்க்​கண்​டேயன் கைது செய்​யப்​பட்​டு, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவரை, கனி​மொழி எம்​.பி. முன்​னாள் அமைச்​சர்​கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்​ளிட்​டோர் சந்​தித்​தனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் கனி​மொழி கூறிய​தாவது: பாளை​யங்​கோட்டை சிறைச்​சாலை திமுக​வுக்கு புதிதல்ல. ஏற்​கெனவே முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யும் இந்த சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தார். எனவே, திமுக​வினர் இந்த சிறைக்கு வந்​தால் அதை பெரு​மை​யாகத்​தான் கருது​வார்​கள். அச்​சுறுத்​தல்​கள், பொய் வழக்​கு​கள், கைது போன்​றவற்​றுக்கு திமுக​வினர் அஞ்ச​மாட்​டார்​கள்.

தமிழகத்​தில் தற்​போது சட்​டம் ஒழுங்கு மிக​வும் மோச​மான நிலை​யில் உள்​ளது. தினந்​தோறும் பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றச்​ சம்​பவங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. ஸ்ரீவை​குண்​டம் தொகுதி எம்​எல்ஏ மீது பெண்​கள் குற்​றச்​சாட்​டு​களை கூறிய நிலை​யிலும், அவர் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. ஆனால், முதல்​வரை தவறாக பேசி​ய​தாக எதிர்க்​கட்​சி​யினரை சிறை​யில் அடைக்​கும் நிலை உரு​வாகி​யுள்​ளது.

தவெகவுக்கு ஜனநாயகத்​தின் மீதும், மக்​கள் மீதும் அக்​கறை இல்​லை. காவல்​துறையை பயன்​படுத்தி எதிர்க்​கட்​சிகளை அரசு அடக்க முயற்​சிக்​கிறது. முதல்​வ​ராக ஸ்டா​லின் இருந்​த​ போது, தவெக எவ்​வளவோ விமர்​சனங்​களை செய்​திருந்​தது. விமர்​சனங்​களை ஏற்​றுக்​கொள்​ளும் அவரது மனப்​பக்​கு​வம், தவெகவுக்கு இல்​லை.

யாருக்கு பயந்து அரசி​யல் செய்​தார்​களோ, அதே நிலை​யில்​தான் அவர்​கள் செயல்​படு​கிறார்​கள். பாஜக பெயரைக் கூட சொல்​வதற்கு தயக்​கம் காட்​டு​கிறார்​கள். டெல்​லி​யில் மாணவர்​கள் போராட்​டம் எப்​படி கையாளப்​படு​கிறதோ, அதே​போன்று தமிழகத்​தி​லும் தவெக செயல்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பாஜக​வுடன், திமுக கூட்​டணி சேருமா என்ற கேள்விக்​கு கனிமொழி பதிலளித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தி​முக தனது கொள்​கை​களில் இருந்து ஒரு​போதும் பின்​வாங்​காது. பாஜக​வுடன் இணை​கிறது என்ற வதந்​தி​களுக்கு பதில் சொல்ல வேண்​டிய அவசி​யமில்​லை. அது​போல், எந்​தக் காலத்​தி​லும் அதி​முக​வும் திமுக​வும் அரசி​யல் ரீதி​யாக நெருங்​கிய​தில்​லை.

நீட் தேர்​வுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. மாணவர்​களின் போராட்​டத்தை ஒடுக்​கு​வதற்​காக பாஜக வன்​முறையை கட்​ட​விழ்த்து விடு​கிறது. இதை திமுக ஒரு​போதும் ஏற்​றுக்​கொள்​ளாது. இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, மார்க்​கண்​டேயன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சார்​பில் ஜாமீன் கோரி அவரது வழக்​கறிஞர்​கள் மனுத் தாக்​கல் செய்​தனர். இந்த மனு விசா​ரணைக்கு ஏற்​கப்​பட்​டது. இதன் மீதான விசா​ரணை இன்று (ஜூலை 22) நடை​பெறு​வ​தாக ஆன்​லைனில் பட்​டியலிடப்​பட்​டுள்​ளது. மார்க்​கண்​டேயனுக்கு ஜாமீன் கிடைக்​குமா என்​பது இன்று தெரியவரும்.

SCROLL FOR NEXT