சென்னை: டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கட்கரியை சந்தித்தேன்.
அப்போது, ‘என்எச்-32 சாலை திட்டத்தால் தூத்துக்குடி - மூலக்கரை, அதைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளின் கவலைகளை எடுத்துரைத்தேன்.
குறிப்பாக, என்எச்-32 சாலையின் புதிய வழித்தடமும், அதனால் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும் குறித்து விவாதித்தேன்.
மேலும், அனுபவம் வாய்ந்த பொறியாளர்களைப் பாதிக்கும் வகையிலான ‘5 ஆண்டு பணி ஒப்பந்த வரம்பு’ குறித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பொறியாளர்கள் சங்கத்தின் கவலைகளையும் அவரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.