தமிழகம்

6 தொகுதிகள்... ‘டார்ச் லைட்’டில் போட்டி - கறாராய் கேட்கும் திட்டத்தில் கமல் கட்சி

வே.கோபாலகிருஷ்ணன்

​தி​முக கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகள் எல்​லாம் இரட்டை இலக்​கத்​தில் தங்​களுக்கு தொகு​தி​கள் வேண்​டும் என திமுக-வை இம்​சித்​துக் கொண்​டிருக்க, கமல்​ஹாசனின் மக்​கள் நீதி மய்​யம் தங்​களது உயரம் தெரிந்து ஆறு சீட்​டுக்கு ஆர்ப்​பாட்​ட​மில்​லாமல் அடி​போட்​டுக் கொண்​டிருக்​கிறது.

2021 சட்​டமன்ற தேர்​தலில் சமக, ஐஜேக கட்​சிகளு​டன் கைகோத்து களமிறங்​கிட கமல். 140 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தி​னார். ஆனாலும் அவர் எதிர்​பார்த்த மேஜிக் நடக்​க​வில்​லை. கோவை தெற்​கில் வானதி சீனி​வாசனிடம் அவரும் நூலிழை​யில் வெற்​றியைத் தவற​விட்​டார். கட்​சி​யின் வாக்கு வங்​கி​யும் 2.5 சதவீத​மாகச் சரிந்​தது. இந்த நிலை​யில், கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் ‘மய்​யத்​தை’ தங்​கள் பக்​கம் இழுத்​தது திமுக. அதற்கு பிர​தி​யுப​கார​மாக கமலை ராஜ்ய சபாவுக்கு அனுப்ப ஒப்​பந்​தம் போட்​டுக் கொண்​டது திமுக.

          

இப்​படி​யான சூழலில் அண்​மை​யில் நடந்த மக்​கள் நீதி மய்​யத்​தின் பொதுக் குழு​வில், “பூத் கமிட்​டிக்கு அஞ்சு பேரைக் கூடப் பிடிக்க முடியலை​யே... நான் தோற்​றுப்​போன அரசி​யல்​வா​தி” என கமல் எமோஷனலாகப் பேசி​யது மய்​யத்​தினரை அதிர வைத்​தது. இதையடுத்​து, ‘திட்​டி​னால் மட்​டும் போதாது தலை​வரே... தேர்​தலில் நமக்​கான பங்கை கேட்டு வாங்​கி​னால் தான் கட்சி வளரும்’ என நிர்​வாகி​கள் இப்​போது கமலுக்கு நெருக்​கடி கொடுக்​கத் தொடங்​கி​யுள்​ளனர்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய மக்​கள் நீதி மய்​யத்​தின் நிர்​வாகி​கள் சிலர், "பொதுக்​குழு​வில் கமல் பேசி​யதை பார்த்து நிர்​வாகி​கள் அதிர்ச்​சி​யடைந்து விட்​டார்​கள். மக்​கள் நம்மை ஆதரிக்க வேண்​டும் என்​றால் போராட்​டம், ஆர்ப்​பாட்​டம் நடத்த வேண்​டும். பிறகு சொந்த சின்​னத்​தில் தேர்​தலில் நிற்க வேண்​டும். அப்​போது​தான் கட்சி வளரும். இதையெல்​லாம் விட்​டுட்டு எங்​களைத் திட்​டி​னால் கட்சி எப்​படி வளரும்? என பலரும் தலை​வரிடம் தங்​களது ஆதங்​கத்தை கொட்​டினர். இதையடுத்தே கட்சி இப்​போது முக்​கிய​மான கட்​டத்தை நோக்கி நகர்ந்​திருக்​கிறது.

அதன்​படி, வரும் தேர்​தலில் ஆறு தொகு​தி​களில் நிற்க வேண்​டும். அது​வும் சொந்​தச் சின்​ன​மான டார்ச்​லைட் சின்​னத்​தில்​தான் களமிறங்க வேண்​டும் என முடிவு செய்​திருக்​கி​றோம். இதற்​காக மயி​லாப்​பூர், வேளச்​சேரி, விரு​கம்​பாக்​கம், ஆலந்​தூர், கோவை தெற்​கு, மதுரை மத்தி அல்​லது தெற்கு என எங்​களுக்​கான தொகு​தி​களை தயா​ராக வைத்​திருக்​கி​றோம். விரை​வில் இதுபற்றி முதல்​வ​ருடன் பேசுவ​தாகச் சொல்லி இருக்​கி​றார் கமல்” என்​ற​னர்.

இதுகுறித்து மநீம செய்​தித் தொடர்​பாளர் முரளி அப்​பாஸிடம் கேட்​டதற்​கு, “கடந்த முறை 10 லட்​சம் வாக்​கு​கள் வாங்​கினோம். தலை​வரின் இமேஜ் உலகறிந்​தது. அதனால் இம்​முறை திமுக கூட்​ட​ணி​யில் நியாய​மான எண்​ணிக்​கை​யில் தொகு​தி​களைக் கேட்​போம். சொந்​தச் சின்​னத்​தில் நிற்​ப​தில் உறு​தி​யாக இருக்​கி​றோம். எத்​தனை தொகு​தி​கள், எந்​தெந்த தொகு​தி​கள் என்​பதை இப்​போது சொல்ல முடி​யாது” என்​றார்​.

SCROLL FOR NEXT