கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர்கள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டார்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 5,36,627, பெண் வாக்காளர்கள் 5,39,441 இதர வாக்காளர்கள் 210 என மொத்தம் 10,76,278 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 33,797 நபர்கள் இறந்துபோனதாகவும், 42,208 நபர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 2,615 நபர்கள் கண்டறிய முடியாதவர்களாகவும், 5,709 நபர்கள் இருமுறை பதிவில் இருந்ததாகவும் கண்டறியப்பட்டு, மொத்தம் 84,329 நபர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் ஆண்கள் 1,33,614, பெண்கள் 1,36,458, இதரர் 68 என மொத்தம் 2,70,140. ரிஷிவந்தியம் தொகுதியில் ஆண்கள் 1.31,734, பெண்கள் 1,30,780, இதரர் 50 என மொத்தம் 2,62,564. சங்கராபுரம் தொகுதியில் ஆண்கள் 1,26,899, பெண்கள் 1,29,216, இதரர் 46 என மொத்தம் 2,56,161. உளுந்தூர்பேட்டை தொகுதியில் ஆண்கள் 1,44,380, பெண்கள் 1,42,987, இதரர் 46 என மொத்தம் 2,87,413 உள்ளனர்.
நீக்கப்பட்டவர்கள் விபரம்: உளுந்தூர்ப்பேட்டை - 17,474, ரிஷிவந்தியம் - 20,317, சங்கராபுரம் - 24,215, கள்ளக்குறிச்சி (தனி) - 22,323 என மொத்தம் 84,329 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.