தமிழகம்

குறுஞ்செய்தி சர்ச்சையால் அன்றாட நிகழ்ச்சிகளை தவிர்த்தார் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி தவெக எம்எல்ஏ-வான அருள்விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு விரும்பத்தகாத குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து எம்எல்ஏ அருள் விக்னேஷ் விளக்கமளித்தார். இதுதொடர்பாக கிளம்பிய சர்ச்சைகளுக்கிடையே ஆட்சியர் பத்மஜா தனது அன்றாட ஆய்வுப் பணிகளை நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் வரை சங்கராபுரம் ஒன்றியத்தில் ஆய்வுப் பணிகளை முடித்து விட்டுச் சென்றார்.

இதையடுத்து நேற்று கல்வராயன்மலையில் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்று, அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்வார் என ஆட்சியர் அலுவலக செய்தித் தகவல் குழுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் நேற்று அங்கு வரவில்லை. ஆட்சியர் அலுவலகத்துக்கும் வரவில்லை.

ஆட்சியருக்குப் பதிலாக, மக்கள் தொடர்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ஜீவா தொடங்கி வைத்து, மலைவாழ் மக்களிடம் மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்காதது குறித்து, ஆட்சியர் அலுவலக உதவியாளர்களிடம் கேட்டபோது, உடல்நலக் குறைவால் ஓய்வில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT