சென்னை ராயபுரத்தில் நேற்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில அவசர செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தலைவர் காதர் மொகி​தீன், நிர்வாகிகள்.

 
தமிழகம்

ஆட்சியில் பங்கு கேட்பதற்கு அவசியம் ஏற்படவில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: ஆட்சியில் பங்கு கேட்பதற்கு அவசியம் ஏற்படவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகி​தீன் தெரிவித்தார். இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் மாநில அவசர செயற்​குழுக் கூட்​டம் சென்னை ராயபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது.

தேசி​யத் தலை​வர் கே.எம்​.​ காதர் மொகி​தீன் தலைமை வகித்​தார். மாநில பொதுச்​செய​லா​ளர் கே.ஏ.எம்​.​முஹம்​மது அபூபக்​கர் வரவேற்​றார்.

          

இக்​கூட்​டத்​தில், 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீண்​டும் திமுக ஆட்சி மலரு​வதற்கு அயராது பாடு​பட​வேண்​டும்; வந்தே மாதரம் தொடர்​பான அறி​விப்பை மத்​திய அரசு திரும்​பப்​பெற வேண்​டும்; இலங்கை தமிழர்​களுக்கு குடி​யுரிமை வழங்க கோரும் முதல்​வரின் கோரிக்​கைகளுக்கு வரவேற்​பு; சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி வேட்​பாளர்​களின் வெற்​றிக்கு பாடுபட வேண்​டும்; மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்​கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு நன்றி என்​பது உள்பட 10 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறிய​தாவது: தமிழகத்​தில் திமுக ஆட்சி மக்​கள் போற்​றக்​கூடிய வகை​யில் சிறப்​பாக நடை​பெறுகிறது. திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யின் நல்​லாட்சி தொடர வேண்​டும். திமுக ஆட்சி செய்​வது நாங்​கள் பெற்ற அதி​கார​மாக நினைக்​கிறோம். ஆட்​சி​யில் அனைத்து அதி​காரத்​தி​லும் எங்​களுக்​கும் பங்கு கொடுத்​திருக்​கிறார்​கள். புதி​ய​தாக பங்கு கேட்​ப​தற்கு அவசி​யம் இல்​லை.

காங்​கிரஸ் கட்​சி​யில் பலதரப்​பட்ட கொள்கை உடைய​வர்​களும், எண்​ணக் கருத்து உடைய​வர்​களும் இருப்​பார்​கள். அவர்​கள் கூறும் கருத்​துகள் ஊடகங்​களில் வெளிவரத்​தான் செய்​யும். அதைக் கொண்​டு, திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் எந்த சலசலப்​பும் கிடை​யாது. இது கருத்து பரி​மாற்​றமே தவிர, சலசலப்பு கிடை​யாது.

விஜய் இது​வரை தேர்​தலில் நிற்​க​வில்​லை. மக்​களே ஜனநாயகத்​தின் எஜமானர்​கள். விஜய் சினிமா நடிகர் என்​ப​தால் ரசிகர்​கள் இருப்​பார்​கள். இதை வைத்​துக்​கொண்டு பெரிய மாற்​றம் வரும் என்​பது தவறு. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT