தமிழகம்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? - காதர் மொகிதீன் விளக்கம்

செய்திப்பிரிவு

கடலூர்: அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி அல்​லது திரு​மாவளவனை முதல்​வ​ராக்க திமுக முயற்சி செய்​தது. ஆனால் மக்​கள் விஜய்க்கு வாக்​களித்த நிலை​யில் மாற்று ஏற்​பாடு​கள் என்​பது ஜனநாயகத்​துக்கு ஏற்​புடைய​தாக இருக்​காது என்​ப​தால் தவெக அரசு அமைய ஆதரவு அளித்​தோம் என்று இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசியதலை​வர் காதர்​மொகிதீன் விளக்​கம் அளித்​துள்​ளார்.

கடலூர் பரங்​கிப்​பேட்டை​யில் நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற அவர் செய்​தி​யாளர்​களிடம் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: தேர்​தல் பிர​சா​ரத்​தின்​போதே பெண்​கள் மற்​றும் இளைஞர்​கள் மத்​தி​யில் மாற்​றத்​துக்​கான மனநிலை இருப்​ப​தாக திமுக​விடம் தெரி​வித்​தோம், ஆனால், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது என்​பது தெரிய​வில்​லை.

அதி​முக எம்​எல்​ஏக்கள் பதவியை ராஜி​னாமா செய்த பிறகே கட்சி மாறி​யுள்​ளனர், இதை ‘கட்சி உடைப்​பு’ என்று கூற முடி​யாது. திமுக​வுட​னான எதிர்​கால உறவு குறித்து 20-ம் தேதி நடை​பெறும் பொதுக்​குழுவில் முடிவு எடுக்​கப்​படும். தீய சக்​தியை தூய சக்​தி​யாக மாற்​றும் முயற்​சி​யை விஜய் மேற்​கொண்​டுள்​ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT