கோப்புப் படம்
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
கி.வீரமணி: ‘தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் மைல் கற்களில் மும்மொழியில் எழுத உள்ளனர்.
அதன் தொடக்கமாகவே தஞ்சை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது’ என செய்தி வந்துள்ளது. பாஜக அரசுக்குப் பயந்து இந்தி திணிப்பை அனுமதித்தால், தமிழக மக்கள், இளைஞர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
வைகோ: தஞ்சை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல் கற்களில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகங்களை மதிமுகவினர் 12-ம் தேதி (இன்று) தார் பூசி அழிப்பார்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் நவ.29-ம் தேதிக்குப் பிறகு எனது தலைமையில் தார் பூசி அழிக்கும் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.