சேலத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் திறந்து வைத்தார். உடன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதிகள் | படம்: எஸ். குருபிரசாத் |

 
தமிழகம்

விசாரணை நீதிமன்றங்களில் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

செய்திப்பிரிவு

சேலம்: நாடு முழு​வதும்​ 3.50 கோடி குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ தேக்​கம்​ அடைந்​துள்​ளன. வி​சா​ரணை நீதி​மன்​றங்​களில்​ வழக்​கு​கள்​ தேக்​கமடை​யாமல்​ இருக்​க வழக்​கறிஞர்​களும்​ நீதி​மன்​ற​மும்​ அரசும்​ ஒருங்​கிணைந்​து செயல்​படு​வது அவசி​யம்​ என உச்​ச நீதி​மன்​ற நீதிப​தி எம்​.எம்​.சுந்​தரேஷ் வலியுறுத்தியுள்​ளார்​.

சேலம்​ அஸ்​தம்​பட்​டி​யில்​ உள்​ள ஒருங்​கிணைந்​த நீதி​மன்​ற வளாகத்​தில்​ ரூ.59.43 கோடியில்​ கட்​டப்​பட்​ட நீதி​மன்​ற கட்​டிடத் திறப்​பு விழா நேற்​று நடை​பெற்​றது. உச்​ச நீதி​மன்​ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தலை​மை வகித்​தார்​. சிறப்​பு விருந்​தினர்​களாக சென்​னை உயர்​ நீதி​மன்​ற தலை​மை நீதிப​தி எஸ்.ஏ.​ தர்​மா​தி​காரி, சென்​னை உயர்​ நீதி​மன்​ற நீதிப​தி​கள்​ சுரேஷ்கு​மார்​, இளந்​திரையன்​, ஜெயச்​சந்​திரன்​, குமரப்​பன்​ பங்கேற்றனர்​.

விழா​வில்​, உயர்​ நீதி​மன்​றதலை​மை நீதிப​தி தர்​மா​தி​காரி பேசும்போது, நீதித்​துறை​யும்​ அரசி​யலமைப்​பு சட்​டத்​தின்​ மூலம்​ மக்​களின்​ பாது​காப்​பு கேடய​மாகத்​ தி​கழ்​கிறது. நீதித்​துறை அதி​காரம்​ மற்​றும்​ செல்​வாக்​கு போன்​றவற்​றுக்​கு பணி​யாமல்​ நீதி​யை நிலை​நாட்​டி வரு​கிறது.

நீதி​யின்​ மாண்​பை போற்​றும்​ வகை​யில்​, நீதி பரி​பாலனம் அமைய வேண்​டும்​ என்​றார்​. புதி​ய நீதி​மன்​ற கட்​டிடத்​தை திறந்​து வைத்​து நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும்​ 4.81 கோடி வழக்​கு​கள்​ தேங்​கி​யுள்​ளன.

அவற்​றில்​ 4.18 கோடி வழக்​கு​கள்​ மாவட்​ட நீதி​மன்​றங்​களில்​ உள்​ளன. இந்​த வழக்​கு​களில்​ குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ மட்​டும்​ 3.50 கோடியாகும். குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ குறைந்​திருக்​க வேண்​டும்​. உரிமை​யியல்​ வழக்​கு​கள்​ அதி​க​மாக இருக்​க வேண்​டும்​. குற்​ற​வியல்​ வழக்​கு​களில்​, 7 ஆண்​டு​கள்​ தண்​டனை வழங்​கக் ​கூடிய வழக்​கு​கள்​ எண்​ணிக்​கை மட்​டும்​ 2.50 கோடி.

வி​சா​ரணை நீதி​மன்​றங்​களில்​ மட்​டும்​ 2.25 கோடி வழக்​கு​கள்​ தேங்​கி​யுள்​ளன. இதுகுறித்​து உச்​ச நீதி​மன்​ற தலை​மை நீதிப​தி​யிடம்​ தெரி​வித்​த​போது, கமிட்​டி அமைத்​து நடவடிக்​கை எடுக்​க அறி​வுறுத்​தி​னார்​.

தமிழகத்​தில்​ மாநில அரசு, வழக்​கறிஞர்​கள், நீதித்​துறை இணைந்​து கமிட்​டி அமைக்​கப்​பட்​டது. வழக்​கு​கள் தேக்​கமடை​யாமல்​ இருக்​க வழக்​கறிஞர்​களும்​ நீதி​மன்ற​மும் அரசும்​ ஒருங்​கிணைந்​து செயல்​படு​வது அவசியமாகும்​.

நாடு முழு​வதும்​ தேங்​கிக்​ கிடக்​கும்​ 3.50 கோடி குற்​ற​வியல் வழக்​கு​களில்​ பெரும்​பான்​மை​யானவை முடிக்​கப்​பட வேண்​டிய​வை. ஆனால்​, சரி​யான அணுகு​முறை இல்​லாத​தால்​ வழக்​கு​கள் தேக்​கமடைந்​துள்​ளன.

குற்றம்​ இழைத்​தவர்​களுக்​கு தண்​டனை கொடுத்து, குற்​றங்​கள்​ நிகழாமல்​ தடுப்​பதே​ நீதித்​துறை​​ பணி. குறிப்​பிட்​ட இடங்​களில்​ நடை​பெறும்​ குற்​றங்​கள்​, ஒரே வகை​யாக நிகழ்​வது ஏன்​, குற்​றங்​கள்​ நிகழ கல்​வியறி​வு போதாமையா, செல்​வ​மின்​மை​யா என குற்​றங்​களுக்​கான அடிப்​படையை கண்​டறிய வேண்​டும்​.

குற்​ற​வாளி​களை கூண்​டில்​ நிறுத்​தி தண்​டனை கொடுத்​தால்​ அந்​த நபரின்​ வழிதோன்​றல்​களும்​ அதே வழி​யில்​ செல்​லும்​ ஆபத்​தும்​ உள்​ளது.

அவர்​களை​யும்​ குற்​றம்​ செய்​யும்​ நிலைக்​கு தள்​ளிவிடக் ​கூ​டாது. எனவே, தேங்​கி கிடக்​கும்​ குற்​ற​வியல்​ வழக்​கு​களை முடிக்​க அனை​வரது ஒத்​துழைப்​பும்​ அவசி​யம்​. முதல்​ ஒத்​துழைப்​பு அரசிட​மிருந்​து வரவேண்​டும். இவ்​வாறு பேசி​னார்​.

விழா​வில்​, சேலம்​ ஆட்​சி​யர்​ அருண்​ தம்​பு​ராஜ், மாநகர காவல் ஆணை​யர்​ அனில்​ குமார்​ கிரி, மாவட்​ட காவல்​ கண்​காணிப்​பாளர்​ கவுதம்​ கோயல்​, சேலம்​ வழக்​கறிஞர்​கள்​ சங்​கத்​ தலை​வர்​ விவே​கானந்​தன்​, செய​லா​ளர்​ நரேஷ் பாபு, குற்​ற​வியல்​ வழக் கறிஞர்​கள்​ சங்​கத்​ தலை​வர் இமய​வர்​மன்​, செய​லா​ளர்​ முரு​கன் உள்​படபலர்​ பங்​கேற்​றனர்​. தலை​மை நீதித்​துறை நடு​வர்​ கமலக்​கண்​ணன்​ நன்​றி கூறி​னார்​.

SCROLL FOR NEXT