அன்பில் மகேஸ் | கோப்புப் படம்

 
தமிழகம்

அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் டிச.2 வரை நீட்டிப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவலை வரும் டிச.2-ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற சட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த அக்.26-ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஊழல் தடுப்பு நீதிமன்றம் நவ.10-ம் தேதி தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 24-ம் தேதிக்கு தள்ளிவைக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலமாக மகேஸை சிறைத் துறையினர் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 2-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT