தமிழகம்

கோடநாடு வழக்கு விசாரணையை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? - சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிபதி கேள்வி

செய்திப்பிரிவு

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணையை இன்​னும் முடிக்​காமல் இருப்​பது ஏன் என சிபிசிஐடி தரப்​பிடம் நீதிபதி கேள்வி எழுப்​பி​னார். மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மற்​றும் அவரது தோழி சசிகலா ஆகியோ​ருக்கு சொந்​த​மான தேயிலை எஸ்​டேட் நீல​கிரி மாவட்​டம் கோடநாடு பகு​தி​யில் உள்​ளது.

இந்த எஸ்​டேட்​டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் 23-ம் தேதி காவலா​ளியை கொலை செய்த ஒரு கும்​பல் பங்​களா​வில் இருந்த சில ஆவணங்​களை கொள்​ளை​யடித்​துச் சென்​றது. இதுதொடர்​பாக முக்​கிய குற்​ற​வாளி சயான் உட்பட 10 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இதுதொடர்​பான வழக்கு ஊட்டி நீதி​மன்​றத்​தில் நடந்து வரு​கிறது.

          

திமுக ஆட்​சிக்கு வந்த பின்​னர் மேற்கு மண்டல ஐஜி தலை​மை​யில் 5 தனிப்​படைகள் அமைத்து விசா​ரணை துரிதப்​படுத்​தப்​பட்​டது. அப்​போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்​கில் தடயங்​களை அழித்​த​தாக கனக​ராஜின் சகோ​தரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேர் கைது செய்​யப்பட்டனர். மேலும் தனிப்​படை போலீ​சார் 316 பேரிடம் மறு​வி​சா​ரணை நடத்​தினர்.

இதைத்​தொடர்ந்து கோடநாடு வழக்கு சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. சிபிசிஐடி போலீ​ஸார் பல்​வேறு கட்​டங்​களாக வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்பி விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்கு ஊட்டி ஒருங்​கிணைந்த நீதி​மன்​றத்​தில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. இவ்​வழக்​கில், அரசு தரப்பு வழக்​கறிஞர் கனக​ராஜ், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முரு​கவேல் தலை​மையி​லான போலீ​ஸாரும் குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களில் வாளை​யார் மனோஜும் ஆஜராகினர்.

இந்​நிலை​யில், விசா​ரணையை இன்​னும் முடிக்​காமல் இருப்​பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு பதிலளித்த அதி​காரி​கள், இது​வரை 269 சாட்​சிகளிடம் விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

வழக்கு தொடர்​பாக செல்​போன் உரை​யாடல் மற்​றும் தகவல் பரி​மாற்​றம் குறித்து குஜ​ராத்​தில் உள்ள பிஎஸ்​என்​எல் ஆய்​வகத்​திடம் இருந்து அறிக்கை கேட்​டிருப்​ப​தாக​வும் இன்​னும் அந்த நிறு​வனத்​திட​மிருந்து தகவல்​கள் வராத​தால் தாமத​மாகி வரு​கிறது என்​றும் தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்​து, வழக்கு வி​சா​ரணையை ஏப்​.24-க்​கு தள்​ளி​வைத்​து நீதிப​தி உத்​தர​விட்​டார்​.

SCROLL FOR NEXT