தமிழகம்

“தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆதவ் அர்ஜுனா இடைஞ்சல்” - ஜோஸ் சார்லஸ் குற்றச்சாட்டு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆதவ் அர்ஜுனா இடைஞ்சலாக உள்ளார் என ஜோஸ் சார்லஸ் மார்டின் குற்றம் சாட்டியுள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறியதாவது: “பராசக்தி படத்தில் இருந்து தான் எனக்கு விழிப்புணர்வு வந்தது. மொழிப்போர் குறித்து எதுவும் தெரியாது என்ற நிலையில் அதிலிருந்து தான் தெரிந்து கொண்டேன். அந்த கால கட்டத்தில் பல துரோகங்களை காங்கிரஸ் செய்துவிட்டு இரட்டை வேடம் போடுகிறார்கள்.

          

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய்யின் தவெக உடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தவெகவிடம் பதில் வரவில்லை. எவ்வளவு நாள் காத்திருக்க முடியும். அதனால் பாஜகவிடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உரிய நேரத்தில் தெரிவிப்போம்.

இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தவெகவில் ஏதும் சொல்லவில்லை. தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆதவ் அர்ஜுனா இடைஞ்சலாக உள்ளார். அதில் ஏகப்பட்ட குளறுபடி உள்ளது. அதைத் தனியாக சொல்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT