தமிழகம்

ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் திட்டம் அறிமுகம்: ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி உள்பட பல சலுகைகள்

செய்திப்பிரிவு

சென்னை: ஜியோ நிறு​வனத்​தின் 10-ம் ஆண்டு நிறைவைக் கொண்​டாடும் வகை​யில், வாடிக்​கை​யாளர்​களுக்கு விலை​யேற்​றத்​தில் இருந்து ஓராண்​டுக்கு பாது​காப்பு அளிக்​கும் ஜியோ பிரைம் மெம்​பர்​ஷிப் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

ரூ.299 திட்​டத்​தில் நாள்​தோறும் 1.5 ஜிபி டேட்டா உள்பட அனைத்து சலுகைகளும் எந்த மாற்​ற​மும் இன்றி தொடரும் என ஜியோ உறுதி அளித்​துள்​ளது. அடுத்த ஓராண்​டுக்கு (2027-ம் ஆண்டு செப்.5 வரை) ஜியோ ரீசார்ஜ் கட்​ட​ணங்​கள் உயர்ந்​தா​லும், பிரைம் வாடிக்​கை​யாளர்​கள் தற்​போதைய ரூ.299 கட்​ட​ ணத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்து பயன்​படுத்​தலாம்.

இத்​திட்​டத்​தில் அனைத்து சலுகைகளும் எந்த மாற்​ற​மும் இன்றி தொடரும் என வாடிக்​கை​யாளர்​களுக்கு ஜியோ உறுதி அளித்​துள்​ளது.

ரூ.299 திட்​டத்​தில் நாள்​தோறும் 1.5 ஜிபி டேட்​டா, 28 நாட்​கள் செல்​லுபடி​யாகும் காலம், ஜியோ ஹாட்​ஸ்​டார், 5 ஆயிரம் ஜிபி ஸ்டோரேஜ், ப்ரோ கூகுல்​ஜெமினி ஆகியவை இடம்​பெற்​றுள்​ளன. புதிய மற்​றும் பழைய வாடிக்​கை​யாளர்​கள் ரூ.300 செலுத்தி இந்த மெம்​பர்​ஷிப்​பில் இணை​ய​லாம்.

புதிய ஜியோஹோம் அல்​லது ஜியோபிசி இணைப்​புக்கு ரூ.300 வவுச்​சர். நண்​பர்​கள்​/ குடும்​பத்​தினருக்கு புதிய ஜியோசிம் இணைப்​புக்கு ரூ.300 வவுச்​சர். சிறப்பு மெம்​பர்​ஷிப்​பில் இணை​யும் வாடிக்​கை​யாளர்​களுக்கு ரூ.600 மதிப்​புள்ள கேஷ்பேக் வவுச்​சர்​கள், புதிய சேவை​களை முன்​கூட்​டியே பயன்​படுத்​தும் ஏர்லி அக்​சஸ் (Early Access) வசதி, முன்​னுரிமை வாடிக்​கை​யாளர் சேவை (Priority Support) ஆகிய சலுகைகளும் வழங்​கப்​படு​கின்​றன.

இணை​யும் வழி​முறை

MyJio செயலி, Jio.com இணை​யதளம், ஜியோ ஸ்டோர்​கள் மற்​றும் அதன் தொடர்​புடைய கடைகள் மூலம் இத்​திட்​டத்​தில் இணை​ய​லாம்.

SCROLL FOR NEXT