தமிழகம்

அதிமுக சார்பில் பிப்.24-ல் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழா பிப்.24-ம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்குகிறார்.

மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கொடிக் கம்பங்களை அமைத்து கொடியை ஏற்றி வைத்து, மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT